தமிழகத்தில் 2001 முதல் எக்ஸிட் போல்கள் சொன்னது என்ன..? நடந்தது என்ன..? ஒரு பரபர கணக்கு..!

Published : Apr 30, 2021, 08:47 AM ISTUpdated : Apr 30, 2021, 08:52 AM IST
தமிழகத்தில் 2001 முதல் எக்ஸிட் போல்கள் சொன்னது என்ன..? நடந்தது என்ன..? ஒரு பரபர கணக்கு..!

சுருக்கம்

தமிழகத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியே ஆட்சியைப் பிடிக்கும் என்று எல்லா வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளும் ஒலித்துள்ளன.   

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது தொடர்பாக வெளியான வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் திமுகவே ஆட்சியைப் பிடிக்கும் என்று எல்லாக் கருத்துக்கணிப்புகளும் தெரிவித்துள்ளன. ஏபிபி - சி.வோட்டர் திமுக கூட்டணி 160 - 172 எனவும், அதிமுக கூட்டணி 58 - 70 எனக் கணித்துள்ளது. ரிபப்ளிக் திமுக கூட்டணி 160-170 எனவும் அதிமுக கூட்டணி 58-68 எனவும் கூறியுள்ளது. இந்தியா டுடே-ஆக்சிஸ் மை இந்தியா திமுக கூட்டணி 175 - 195 எனவும் அதிமுக கூட்டணி 38-54 எனவும் கூறியுள்ளது. 

பி மார்க் திமுக கூட்டணி 165-190 எனவும் அதிமுக கூட்டணி 40-65 எனவும் கணித்துள்ளது. டுடேஸ் சாணக்யா திமுக கூட்டணி 164 - 186 எனவும் அதிமுக கூட்டணி 46 - 68 எனவும் தெரிவித்துள்ளது. இதேபோல பிற கருத்துக்கணிப்புகளும் திமுக ஆட்சி அமைக்கும் என்றே தெரிவித்துள்ளன. எனவே திமுகவினர் உற்சாகத்தில் இருக்கிறார்கள். இந்நிலையில் கடந்த காலங்களில் வந்த வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் சொன்னப்படி வெற்றி பெற்றனவா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 
2001 எக்ஸிட் போல்
சிஎன்என்-ஐபிஎன்-தி ஹிந்து நடத்திய எக்ஸிட் போலில் அதிமுக கூட்டணி 125 தொகுதிகளில் வெல்லும் என்றும் திமுக கூட்டணி 105 தொகுதிகளில் வெல்லும் என்றும் கூறியது. ஆனால், தேர்தலில் அதிமுக கூட்டணி 196 இடங்களில் வென்றது. திமுக கூட்டணி 37 இடங்களில் மட்டுமே வென்றது.
2006 எக்ஸிட் போல்
சிஎன்என்-ஐபிஎன்-தி ஹிந்து நடத்திய எக்ஸிட் போலில் அதிமுக கூட்டணி 64 - 74 தொகுதிகளில் வெல்லும் என்றும் திமுக கூட்டணி 157 -167 தொகுதிகளில் வெல்லும் என்றும் கூறியது. இந்தத் தேர்தலில் கருத்துக்கணிப்பு கூறியதைப் போல திமுக கூட்டணி 163 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதிமுக கூட்டணி 69 இடங்களில் வென்றது. 
2011 எக்ஸிட் போல்
ஹெட்லைன்ஸ் டுடே - ஓ.ஆர்.ஜி. கருத்துக்கணிப்பில் திமுக கூட்டணி 115 - 130 தொகுதிகள் எனவும் அதிமுக கூட்டணி 105-120 எனவும் கூறியது. சிஎன்என்-ஐபிஎன்-தி வீக் திமுக கூட்டணி 102-114 எனவும் அதிமுக கூட்டணி 120-132 தொகுதி எனவும் கூறியது. ஸ்டார் நியூஸ் திமுக கூட்டணி 124 தொகுதிகள் எனவும் அதிமுக கூட்டணி 110 தொகுதிகள் எனவும் கணித்தது. நியூஸ் எக்ஸ்-சி வோட்டர் திமுக கூட்டணி 54-62 எனவும் அதிமுக கூட்டணி 176 எனவும் கூறியது. ஆனால், தேர்தலில் அதிமுக கூட்டணி 203 தொகுதிகளில் வெற்றி பெற்றது. திமுக கூட்டணி 31 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.
2016 எக்ஸிட் போல்
கடந்த 2016 தேர்தலில் வாக்குப்பதிவுக்கு பிந்தையக் கருத்துக்கணிப்பில் ஏபிபி- நீல்சன் திமுக கூட்டணி 114 - 118 எனவும் அதிமுக 95 - 99 எனவும் கணித்தது. டைம்ஸ் நவ் - சி.வோட்டர் திமுக கூட்டணி 78 எனவும் அதிமுக 139 எனவும் கணித்தது. நியூஸ் எக்ஸ் டுடே - சாணக்யா திமுக கூட்டணி 140 எனவும் அதிமுக 90 எனவும் தெரிவித்தது. இந்தியா டுடே திமுக கூட்டணி 124-140 எனவும் அதிமுக 89-101 எனவும் கணித்தது. என்டிடிவி திமுக கூட்டணி 120 எனவும் அதிமுக 103 எனவும் கணித்தது. பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் திமுக ஆட்சி அமைக்கும் என்றே கூறின. 
ஆனால், 2016 சட்டபேரவைத் தேர்தலில் வாக்குப்பதிவுக்கு பிந்தைய எல்லா கருத்துக்கணிப்புகளும் பொய்த்தன. தனித்து களம் கண்ட அதிமுக 134 தொகுதிகளில் வெற்றி பெற்றது. திமுக  கூட்டணி 98 இடங்களில் வெற்றி பெற்றது. கடந்த 20 ஆண்டுகளில் 2001, 2011, 2016 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தலில் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பொய்த்துபோயின. தற்போது வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் இரண்டு தினங்களே உள்ள நிலையில், எக்ஸிட் போல் இந்த முறையும் வெற்றி பெறுமா இல்லையா என்பது தெரிந்துவிடும்.

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!