இட்லி சாப்பிட்டார்.... சட்னி சாப்பிட்டார் எல்லாம் ட்ராமா.??? ஆறுமுகசாமி கமிஷனில் மர்மம் உடைத்த ஓபிஎஸ்..

Published : Mar 22, 2022, 01:33 PM IST
இட்லி சாப்பிட்டார்.... சட்னி சாப்பிட்டார்  எல்லாம் ட்ராமா.??? ஆறுமுகசாமி கமிஷனில் மர்மம் உடைத்த ஓபிஎஸ்..

சுருக்கம்

ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட போது என்ன சாப்பிட்டார் என்ற கேள்விக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பதில் அளித்துள்ளார்.

 ஜெயலலிதா மரணம்- ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை
 
சட்டமன்ற தேர்தலில் எம்ஜிஆருக்கு பிறகு யாரும் இரண்டாவது முறையாக தொடர்ந்து வெற்றி பெறாத நிலையில்  2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தனித்து  போட்டியிட்டு வெற்றி பெற்று சாதனை படைத்தார் ஜெயலலிதா,  இரண்டாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சி சிம்மாசனத்தில் அமர்ந்த ஜெயலலிதாவிற்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இரவோடு இரவாக அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை அளிக்கப்பட்டது.  இருந்த போதும் 75 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு ஜெயலலிதா மரணம் அடைந்தார். இந்த சம்பவம் அதிமுக தொண்டர்களை  அதிர்ச்சி அடைய செய்தது. இதனையடுத்து  ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையம் இதுவரை 140க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளது. 

வாக்குமூலம் அளித்த ஓபிஎஸ்

இதனையடுத்து  அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு சம்மன் அனுப்பி இருந்த நிலையில் நேற்றைய தினம் அவர் ஆஜர் ஆகி இருந்தார். மேலும் சசிகலா அண்ணன் மனைவி இளவரசி மற்றும் அவரது மகன் விவேக் ஆகியோரும் ஆஜராகி ஆறுமுகசாமி ஆணையத்தின் கேள்விக்கு பதில் அளித்து இருந்தனர். நேற்று சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக ஓ.பன்னீர்செல்வத்திடம் விசாரணை நடைபெற்றது. இதனை தொடர்ந்து இன்று மீண்டும் ஓ.பன்னீர் செல்வம் ஆஜரானார் அப்போது ஆறுமுக சாமி ஆணையத்தின் சார்பாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த அவர், அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த போது ஒரு சில முறை அவர் நன்றாக இருப்பதாக சசிகலா தன்னிடம் தெரிவித்ததாகவும், இதனை சக அமைச்சர்களிடம் மட்டுமே தெரிவித்ததாகவும், பொதுவெளியில் எங்கும் நான் பேசவில்லை எனவும் ஓ.பன்னீர்செல்வம் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். மேலும் அரசாங்க பணிகள் தொடர்பாக ஜெயலலிதா கூறியதாக சசிகலா எந்தவித தகவலையும் தன்னிடம் தெரிவிக்கவில்லையென்றும்  ஓ.பன்னீர்செல்வம் கூறினார். இதனை தொடர்ந்து ஜெயலலிதாவுக்கு இதயத்தில் இருந்த பிரச்னை தொடர்பாக ஓ.பன்னீர்செல்வத்திடம் ஆணையம் கேள்வி எழுப்ப முயன்ற போது அப்பல்லோ தரப்பு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தனர். 

ஜெயலலிதா மருத்துவமனையில் என்ன சாப்பிட்டார்?

சிகிச்சை தொடர்பாக எதுவும் தனக்கு தெரியாது என நேற்றே வாக்குமூலம் அளித்த நிலையில் இன்று அது தொடர்பான கேள்விகளை எழுப்ப கூடாது என அப்பல்லோ வழக்கறிஞர் கூறினார். ஜெயலலிதாவுக்கு இருந்த வியாதி தொடர்பாகவோ, அதற்கு அவர் எடுத்துக்கொண்ட மருந்துகள், அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து தான் கேள்வி எழுப்பக் கூடாது. வியாதி இருந்தது உங்களுக்கு தெரியுமா என கேள்வி எழுப்பலாம் என  ஆணைய வழக்கறிஞர் அப்போது தெரிவித்தார். இதனை  தொடர்ந்து ஜெயலலிதா மருத்துவமனையில் என்ன சாப்பிட்டார், என்ன உணவு வழங்கப்பட்டது தொடர்பான  கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த ஓ.பன்னீர் செல்வம் மருத்துவமனையில் ஜெயலலிதா இருந்த போது என்ன உணவு வழங்கப்பட்டது என்பது குறித்து தனக்கு தெரியாது என கூறினார். ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போது ஜெயலலிதா உடல் நலத்தோடு இருப்பதாகவும், இட்லி சாப்பிட்டதாகவும்  அதிமுக முன்னாள் அமைச்சர்கள், அதிமுக மூத்த நிர்வாகிகள் கூறிவந்தனர் இந்தநிலையில்  ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது பொறுப்பு  முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் தனக்கு எதுவும் தெரியாது என கூறியிருப்பது அதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

PREV
click me!

Recommended Stories

ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!