பெட்ரோல் விலை ரூ.1 குறைக்க முடிவு! முதல்வர் அதிரடி முடிவு...

By sathish kFirst Published Sep 11, 2018, 4:34 PM IST
Highlights

பெட்ரோல் - டீசல் விலை உயர்வு, அதியாவசியப் பொருட்கள் விலை உயர்வு மற்றும் ரூபாய் மதிப்பு குறைவு உள்ளிட்ட பொதுமக்களை பாதிக்கும் விவகாரங்களுக்கு கண்டனம் தெரிவித்து நாடு முழுக்க நேற்று முழு அடைப்பு நடைபெற்றது. 

பெட்ரோல் - டீசல் விலை உயர்வு, அதியாவசியப் பொருட்கள் விலை உயர்வு மற்றும் ரூபாய் மதிப்பு குறைவு உள்ளிட்ட பொதுமக்களை பாதிக்கும் விவகாரங்களுக்கு கண்டனம் தெரிவித்து நாடு முழுக்க நேற்று முழு அடைப்பு நடைபெற்றது. 

டெல்லியில் ராகுல் காந்தி தலைமையில் எதிர்கட்சிகள் போராட்டம் நடத்தின.தமிழ்நாட்டில் திமுக, பாமக, மதிமுக, த.மா.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் இந்த வேலை நிறுத்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து போராட்டங்கள் நடத்தின.

மோடி அரசு கடைப்பிடித்து வரும் பொருளாதாரக் கொள்கையின் விளைவாக பெட்ரோல் - டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலைகள் கடுமையாக அதிகரித்துள்ளன என்று எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

இந்தியா முழுவதும் போராட்டங்கள் நடந்த நிலையில், ஆந்திர மாநிலத்தில் பெட்ரோல் - டீசல் விலையில் தலா 2 ரூபாய் குறைக்க உள்ளதாக முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு நேற்று அறிவித்திருந்தார். ஆந்திர அரசின் இந்த அறிவிப்பை கேட்ட வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

நேற்று நடைபெற்ற பாரத் பந்துக்கு மேற்கு வங்க மாநில அரசு எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இதுகுறித்து மேற்கு வங்க முதலமைச்சர், பெட்ரோல் - டீசல் விலை உயர்வுக்கு சரியான தீர்வு வேலை நிறுத்தம் என்று நாங்கள் கருதவில்லை என்றும் இதனால் பொருளாதாரம் விரயமாவதாகவும் கூறினர். இந்த நிலையில் மேற்கு வங்கத்தில் பெட்ரோல் - டீசல் விலை ஒரு ரூபாய் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

click me!