நான் ரஜினியின் ரசிகன் அதிரடி காட்டிய ஆளுனர்..!! அரசியலுக்கு சரிபடுவாரான்னு என்னால சொல்ல முடியாது என நழுவல்..!!

By Ezhilarasan BabuFirst Published Nov 11, 2019, 4:43 PM IST
Highlights

ரஜினியின் லட்சக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன்,  அவருக்கே ஏகோபித்த மக்கள் ஆதரவு உள்ளது.  அவரின் சமீபத்திய படங்கள் அனைத்தையும் பார்த்து இருக்கிறேன்.  ஆனால் அவர் அரசியலில்  எப்படி செயல்படுவார் என்பது குறித்து என்னால் தற்போதைக்கு கணிக்க முடியாது என தெரிவித்துள்ளார். 

ரஜினியின் லட்சக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன் என மேற்கு வங்க ஆளுநர் அதிரடியாக கருத்து கூறியுள்ளார். தன்மீது காவி சாயம் பூச முயற்ச்சிகள் நடக்கிறது என அவர் கூறியுள்ள நிலையில் ஆளுனரின் இக்கருத்து முக்கித்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

 

விரைவில் அரசியலுக்கு வரப்போகிறேன் எனக்கூறி கட்சிக்கான கட்டமைப்புகளை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ரஜனி ஈடுபட்டுள்ளார்.  அப்பணிகள் 90% நிறைவடைந்துள்ள நிலையில் எதிர்வரும் சட்டமன்ற  தேர்தல் நெருக்கத்தில் அதிகாரப்பூர்வமாக கட்சியை அறிவித்து அவர் தேர்தலில் போட்டியிடுவார் என தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. ஆரம்பத்தில் ஆன்மீக அரசியல் என ரஜினி கூறியதையடுத்து பாஜகவினர் ரஜினிக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.  பாஜகவின் அரசியல் இந்துமத அரசியல் என்றால்  ரஜினியின் அரசியல் ஆன்மீக அரசியல் இரண்டும் ஒன்றுதான். எனவே ரஜினிக்கு எப்போதும் தங்கள் ஆதரவு உள்ளது எனக் பாஜகவினர் கூறி வருகின்றனர்.  ரஜினியும்  அவ்வப்போது மத்திய அரசின் கொள்கைகளுக்கு ஆதரவாக பேசிவருகிறார்.  இந்நிலையில் சில தினங்களுக்கு முன் செய்தியாளர்களை சந்தித்த அவர்,  தன்மீது காவி சாயம் பூச முயற்சிகள் நடைபெறுகிறது,  அதில் நானும் சிக்க மாட்டேன்,  திருவள்ளுவரும் சிக்க மாட்டார் என தெரிவித்திருந்தார். 

அது பாஜகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ரஜினி திடீரென இப்படி பல்டியடித்துவிட்டாரே என்று புலம்பி வருகின்றனர்.   இந்நிலையில் மேற்கு வங்க கவர்னர்  ஜெகதீப் தன்கார்,  கொல்கத்தாவில் உள்ள ராஜ் பவனில் செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது ,  ரஜினி அரசியல் வருகை குறித்து  அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார், அதற்கு பதிலளித்த ஆளுநர்,  ரஜினியின் லட்சக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன்,  அவருக்கே ஏகோபித்த மக்கள் ஆதரவு உள்ளது.  அவரின் சமீபத்திய படங்கள் அனைத்தையும் பார்த்து இருக்கிறேன்.  ஆனால் அவர் அரசியலில்  எப்படி செயல்படுவார் என்பது குறித்து என்னால் தற்போதைக்கு கணிக்க முடியாது என தெரிவித்துள்ளார். 
 

 

click me!