ராட்சத கிணறு விவகாரம்: கிணறு, 18 சென்ட் நிலம் வழங்க ஓ.பி.எஸ். முடிவு

First Published Aug 20, 2017, 4:37 PM IST
Highlights
Well 18 cents of land is decided to provide land


முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மனைவி விஜயலட்சுமி பெயரில் உள்ள ராட்சத கிணறு மற்றும் 18 சென்ட் நிலம் நாளை கிராம மக்களிடம் ஒப்படைக்க ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

தேனி மாவட்டம் லட்சுமிபுரத்தில் ஓபிஎஸ்சின் மனைவி விஜயலட்சுமி பெயரில் ராட்சத கிணறு ஒன்று இருந்தது. அந்த கிணற்றில் இருந்து அதிக அளவு தண்ணீர் உறிஞ்சப்பட்டதால் அப்பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டதுடன், விவசாயமும் பாதிக்கப்பட்டது.

இதனால் அதிர்ச்சி அடைந்த லட்சுமிபுரம் மக்கள், அந்த கிணற்றை ஊராட்சியிடம் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்நிலையில்  ஓபிஎஸ் அந்த கிணற்றை லட்சுமிபுரம் மக்களுக்கு இலவசமாக தருவதாக முன்வந்தார். இதனிடையே சர்ச்சைக்குரிய கிணறு ஒபிஎஸ்சின் நண்பர் சுப்புராஜ் என்பருக்கு விற்கப்பட்டதாக தகவல் வந்தது.

இதையடுத்து அதிர்ச்சி அடைந்த மக்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து நடைபெற்ற பேச்சவார்த்தையில் ஏற்கனவே உறுதி அளித்தபடி கிணறு, போர்வெல், 12 சென்ட் நிலம் போன்றவற்றை தானமாக தருவதாக ஓபிஎஸ் உறுதியளித்தார்.

ஆனால் இதுவரை அதற்கான நடவடிக்கையை எடுக்காத பன்னீர்செல்வத்தை கண்டித்து ராட்சத கிணறை உறுதியளித்தபடி மக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மனித சங்கிலி போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், லட்சுமி புரம் கிராம மக்களிடம் கிணறு மற்றும் 18 சென்ட் நிலம் நாளை ஒப்படைக்க உள்ளதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

click me!