விசில் ஊதுவதற்கு முன்பே ஓட்டமெடுக்கிற தொடைநடுங்கும் கும்பல் திமுக: 200 தொகுதிகளை கைப்பற்றுவோம்.. அதிமுக அதிரடி

Published : Nov 23, 2020, 11:57 AM IST
விசில் ஊதுவதற்கு முன்பே ஓட்டமெடுக்கிற தொடைநடுங்கும் கும்பல் திமுக: 200 தொகுதிகளை கைப்பற்றுவோம்.. அதிமுக அதிரடி

சுருக்கம்

ஆனால் கழகம் செய்திருக்கும் சாதனைகளை கண்ணியத்தோடு எடுத்து வைத்தாலே போதும் அது 200 தொகுதிகளுக்கு மேலாக வெற்றியை அள்ளிக் கொடுக்கும் என்று பெருமிதத்தோடு பீடுநடை போடுகிறது அதிமுக.  

தேர்தல் களத்தில் விசில் ஊதுவதற்கு முன்பே ஓட்டமெடுக்கிற தொடை நடுக்க கும்பலாக திமுக இருக்கிறது. பிரச்சாரம் என்ற பெயரிலே அபச்சாரம் செய்யத் தொடங்கி இருக்கிறது என அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடு திமுகவை விமர்சித்துள்ளது. திமுகவின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் கூறியதற்கு அதிமுக இவ்வாறு பதிலடி கொடுத்துள்ளது. அக்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மாவில், குத்தீட்டி பகுதியில் இது குறித்து கூறியிருப்பதாவது: 

சமீபத்தில் நடந்து முடிந்த நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்களில் திமுகவை சுமார் 50 ஆயிரம் வாக்குகளுக்கு மேலான வித்தியாசத்தில் தோற்கடித்த இயக்கம் அதிமுக. அது மட்டுமல்ல, 5 தொகுதிகளின் வெற்றியே அதிமுக ஆட்சிக்கு போதுமானது என்ற நிலையில் இரட்டிப்பாக 9 தொகுதிகளில் வெற்றியை பெற்றதும், எளிமை சாமானியர் எடப்பாடியாரின் நல்லாட்சிதான். அவ்வழியிலே இப்போதும் 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில் பிரம்மாண்ட வெற்றியை ஈட்டி ஆட்சியில்இருந்து கொண்டே மூன்றாம் முறையாக ஆட்சியை தொடர்கிற அதிசயத்தை நிகழ்த்தயிருக்கிறது ஈகைக்கும், வாகைக்கும் இலக்கணம் வகுத்த இரட்டைஇலை இயக்கம். 

கழகத்தின் வெற்றியை தடுப்பதற்கு அவதூறுகளை மட்டுமே முன் வைத்து அரசியல் நடத்தும் மு.க ஸ்டாலினுக்கு தமிழ்நாட்டு மக்கள் தரப்போகிற தீர்ப்ப  மூக்கறுப்பு என்பது மட்டும்தான். உழவன் வீட்டில் உதித்த உழவனாக, ஒரு விவசாயி வீட்டில் விளைந்த வெள்ளந்தி தலைவனாக, 2021ல் முதலமைச்சர் இருக்கையை அலங்கரிக்க காத்திருப்பவர் எடப்பாடியார் என்பது திமுகவினருக்கே தெளிவாக தெரிந்துவிட்டது. அதனால்தான் விசில் ஊதுவதற்கு முன்பே ஓட்டம் எடுக்கிற தொடை நடுக்க கும்பலாக திமுக பிரச்சாரம் என்ற பெயரிலேயே அபச்சாரம் செய்யத் தொடங்கியிருக்கிறது. ஆனால் கழகம் செய்திருக்கும் சாதனைகளை கண்ணியத்தோடு எடுத்து வைத்தாலே போதும் அது 200 தொகுதிகளுக்கு மேலாக வெற்றியை அள்ளிக் கொடுக்கும் என்று பெருமிதத்தோடு பீடுநடை போடுகிறது அதிமுக. 

காவிரி உரிமையை  மீட்டு கழனிவாழ் உழவினத்தின்  நீரோட்டம் காத்து. மீத்தேனை துரத்தி, மின் மிகை மாநிலமாக தமிழகத்தை உயர்த்தி, ஜல்லிக்கட்டு உரிமையை மீட்டு, சமூகநீதி காத்த 11 மருத்துவ கல்லூரிகளுக்கு புறப்பாடு புரிந்து அத்திக்கடவு அவினாசி திட்டம் தந்து இன்னும் இன்னுமாக பட்டியலிட முடியாத அளவுக்கு சாதனைகளைப் புரிந்து, தெம்போடு கொடி பிடிக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் வெற்றியை துண்டுச்சீட்டு கோமாளிகள் தடுக்கவும் முடியாது. கழகத்தின் மிடுக்கை இன்னும் குறைக்கவும் இயலாது இவ்வாறு பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai: அக்டோபரில் ரூ.2,500 வரப்போகுதா? முதல்வர் விஜய் கொடுக்கப்போகும் அடுத்த ஜாக்பாட்!
Thaimaman Thanga Modhiram Scheme: தாய்மாமன் தங்க மோதிரம் - யார் தகுதி? என்னென்ன ஆவணங்கள் தேவை?