ஆளுநரின் திமிரை நாம் அடக்க வேண்டும்..!திமிரெடுத்து பேசுவதை விடமாட்டோம்..! மு.க.ஸ்டாலின் சூளுரை..!

Published : Nov 26, 2025, 01:51 PM ISTUpdated : Nov 26, 2025, 01:57 PM IST
R.N.Ravi

சுருக்கம்

ஆளுநர் ஆர்.என்.ரவி திமிருடன் பேசுகிறார். அவரது திமிரை அடக்க வேண்டும். எங்க பசங்க உலக வாய்ப்புகளுக்காக ஆன்கில மொழியை படிக்கிறார்கள். அதில் உங்களுக்கு என்ன பிரச்சினை. உங்களுக்கு எங்கே எரியுது?

‘‘பாஜகவிற்கு வாக்களிக்கதாவர்களை தீவிரவாதிகள் போல் சித்தரிக்கிறார்’’ என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார்.

ஈரோட்டில் சுதந்திரப் போராட்ட வீரர் பொல்லான் சிலையுடன் கூடிய அரங்கத்தை திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், ‘‘ஆளுநர் ஆ.என்.ரவி. தமிழ்நாட்டில் பாதுகாப்பு பிரச்சனைகள் இருப்பதாக ஆளுநர் ரவி அவதூறு பரப்புகிறார். பாஜகவிற்கு வாக்களிக்கதாவர்களை தீவிரவாதிகள் போல் சித்தரிக்கிறார். அவர் வகிக்கிற அரசியல் சாசன பதவிக்கு துளியும் பொருத்தமற்ற தரக்குறைவான பேச்சு இது. ஆளுநர் ஆர்.என்.ரவி திமிருடன் பேசுகிறார். அவரது திமிரை அடக்க வேண்டும். எங்க பசங்க உலக வாய்ப்புகளுக்காக ஆன்கில மொழியை படிக்கிறார்கள். அதில் உங்களுக்கு என்ன பிரச்சினை. உங்களுக்கு எங்கே எரியுது? அமைதிப் பூங்காவாக இருக்கும் தமிழ்நாட்டை தீவிரவாத மாநிலம் என திமிரெடுத்து பேசியிருக்கிறார் ஆளுநர் ரவி. தமிழர்களை தேசவிரோதிகள் என சித்தரித்து ஆளுநர் ரவி பேசுவது வன்மையாக கண்டிக்கக்கத்தக்கது.

ஒன்றிய பாஜக ஆட்சியில்தான் பஹல்காம் தாக்குதல், டெல்லி செங்கோட்டை குண்டுவெடிப்பு நடந்துள்ளது. தீவிரவாத தாக்குதலில் மக்கள் பலியாவதை தடுக்க முடியாத அரசை ஆளுநர் புகழ்கிறார்.

வடமாநிலங்களில் 20 லட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகை கிண்ட நகரங்களுக்கு மெட்ரோ திட்டத்திற்கு ஒப்புதல் கொடுக்கிறார்கள். தமிழ்நாடு என்றால் மட்டும் கம்பி கட்டுகிற கதை எல்லாம் சொல்கிறார்கள்.  தமிழ்மொழி பற்று பற்றி தமிழ்நாட்டிற்கு வகுப்பெடுக்காதீர்கள்; அந்த பாடத்தில் Ph.D வாங்கியவர்கள் நாங்கள் . வரி வசூலிக்க மட்டும் தமிழ்நாடு; ஆனால், அவர்களுக்கு பட்டை நாமம் போடுகிறது பாஜக.

தந்தை பெரியார் இல்லை என்றால் திராவிட இயக்கம், பேரறிஞர் அண்ணா , கலைஞர் இல்லை. தமிழ்நாட்டுக்கு இந்த அளவு வளர்ச்சியும் இருந்திருக்காது. தமிழ்நாடு விவசாயிகளின் நெல் ஈரப்பத தளர்வு கோரிக்கைக்காக பிரதமரை சந்திக்கிறேன் என பழனிசாமி சொன்னால், தமிழ்நாடு அரசின் சார்பில் நானே கார் ஏற்பாடு செய்து தருகிறேன். அதுவும் வேர்க்காத அளவுக்கு நல்ல கார் தந்து அனுப்பி வைக்கிறேன்'' எனத் தெரிவித்துள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

21 தான் தர முடியும்.. இஷ்டம்னா இருங்க இல்லைனா.. கெத்து காட்டும் திமுக.. புலம்பும் கதர்சட்டைகள்!
1000, 2000 இல்ல ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10000..! பழனிசாமி ஜாக்பாட் அறிவிப்பு..