வன்னியர்களுக்கு என்ன உரிமை உள்ளதோ அதே உரிமைதான் எங்களுக்கும் இருக்கு.. கொந்தளிக்கும் கருணாஸ்.

Published : Apr 06, 2022, 05:31 PM IST
வன்னியர்களுக்கு என்ன உரிமை உள்ளதோ அதே உரிமைதான் எங்களுக்கும் இருக்கு..  கொந்தளிக்கும் கருணாஸ்.

சுருக்கம்

வன்னிய மக்களுக்கு அவர்களது உரிமையை கேட்டு பெற எவ்வளவு உரிமை இருக்கிறதோ அதேபோல் எங்களது மக்களின் உரிமையை பெறுவதற்கு எனக்கு  உரிமை இருக்கிறது என முக்குலத்தோர் புலிப்படை ஒருங்கிணைப்பாளரும், நடிகருமான கருணாஸ் கூறியுள்ளார்.  

வன்னிய மக்களுக்கு அவர்களது உரிமையை கேட்டு பெற எவ்வளவு உரிமை இருக்கிறதோ அதேபோல் எங்களது மக்களின் உரிமையை பெறுவதற்கு எனக்கு  உரிமை இருக்கிறது என முக்குலத்தோர் புலிப்படை ஒருங்கிணைப்பாளரும், நடிகருமான கருணாஸ் கூறியுள்ளார். அரசியலை தொழிலாக எடுத்து செய்திருந்தால் வசதியாக வாழ்ந்து இருப்பேன் என்றும், ஆனால்  இப்போது நடித்த தான் சம்பாதிக்க வேண்டும் என்ற அவசியம் உள்ளதால் நடிக்க வந்திருப்பதாகவும், தற்போது வரை தான் வாடகை வீட்டில்தான் வசிப்பதாகவும் கருணாஸ் தெரிவித்துள்ளார்.

மேடை கலைஞர், பாடகர்,  காமெடி நடிகர், அரசியல்வாதி என படிப்படியாக உயர்ந்து தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கி வைத்துள்ளார் நடிகர் கருணாஸ்.  முக்குலத்தோர் புலிப்படை என்ற அமைப்பை உருவாக்கி அதன்மூலம் சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார்அவர். எதையும் வெளிப்படையாக பேசக்கூடியவராகவும் கருணாஸ் இருந்து வருகிறார். சில நேரங்களில் அதுவே அவருக்கு சிக்கல்களை ஏற்படுத்தியும் விடுகிறது என்பதை பலரும் அறிவர். சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது கடந்த 2018 ஆம் ஆண்டு  செப்டம்பர் மாதம் 16ஆம் தேதி முக்குலத்தோர் புலிப்படை சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட கருணாஸ் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். அந்த ஆர்ப்பாட்டத்தில் காவல்துறை அதிகாரிகள் குறித்து, காக்கி சட்டையை கழட்டி வைத்துவிட்டு வாருங்கள் பார்க்கலாம் என வன்முறையை தூண்டும் வகையில் சவால் விடுத்து பேசியிருந்தார்.

அப்போது அவதூறாக பேசியதாக நுங்கம்பாக்கம் போலீசார் அவர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். அதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் விடுதலையானார், சினிமாவில் வாய்ப்புதேடிய காலத்தில் தன்னை இலங்கை அகதியாக காட்டிக்கொண்டு திரைப்படத்தில் வாய்ப்பு பெற்ற அவர், கிறிஸ்தவ மதத்துக்கு மாறி பின்னர் தன்னை முக்குலத்தோராக காட்டிக் கொள்கிறார் என அவர் மீது பல விமர்சனங்கள் இருந்து வருகிறது. இந்நிலையில் வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு விவகாரத்தில் தொடர்ந்து பாமகவுக்கும், 10.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்கும் எதிராக கருணாஸ் பேசி வருகிறார். இதுதொடர்பாக  சில தினங்களுக்கு முன்னர் 10.5 சதவீத இட ஒதுக்கீடு ரத்து செய்தது செல்லும் என நீதிமன்றம் அளித்த தீர்ப்பை வரவேற்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.

அவரின் அறிக்கையை பாமகவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் இது தொடர்பாக தனியார் ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் அவர் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- பிற்படுத்தப்பட்ட சமூகமான வன்னிய மக்கள் அவர்களுக்கான உரிமையை கேட்டுப் பெறுவதற்கு அவர்களுக்கு எப்படி உரிமை இருக்கிறதோ, அதே போல் என் சமுதாயத்தை சேர்ந்த மக்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேருங்கள் என கேட்பதற்கு எனக்கும் உரிமை உள்ளது. எனவே இந்த அடிப்படை அரசியலை புரிந்து கொண்ட மக்கள் கோபப்பட மாட்டார்கள். தற்போது 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்த்து வருவது சாதி ரீதியான மோதல் இல்லை, சமூக நீதி சார்ந்த அனைவருக்குமான உரிமை பெற்றிருக்க வேண்டும் என்ற சட்டப் போராட்டத்தைதான் நான் கையில் எடுத்துள்ளேன்.

நான் முன்வைத்த கேள்வியின் நியாயத்தை புரிந்து கொண்டதால்தான் தற்போது நீதிமன்றம் இப்படி ஒரு தீர்ப்பளித்திருக்கிறது. முன்பெல்லாம் இட ஒதுக்கீடு தொடர்பான புரிதல் மக்களிடையே இல்லாமல் இருந்தது. ஆனால் தற்போது அதற்கான புரிதல் ஏற்பட்டிருக்கிறது. 10.5 சதவீத உள் ஒதுக்கீடு அமலாக்கப்பட்ட பிறகுதான் கல்லூரிகளில் சீட் கிடைக்காமல் அவதிப்பட்ட பிறகு சமுதாய மக்கள் 10.7 சதவீத இட ஒதுக்கீடு குறித்து கேள்வி எழுப்ப ஆரம்பித்துள்ளனர். வன்னிய சமூகம் தென் மாவட்டங்களில் பெரும்பான்மையாக கிடையாது எனவே 10.5 சதவீத இட ஒதுக்கீட்டில் நிரப்ப மாணவர்கள் இல்லாமல் பல கல்லூரிகளில் சீட் காலியாக உள்ளன. இப்போது கூட பரமக்குடியில் ஏழு சீட்கள் காலியாக உள்ளன. இந்த காலியான இடங்களை மற்ற சமுதாய மாணவர்களுக்கு கொடுப்பதில்லை, இப்போது உள்ள இட ஒதுக்கீடு ரத்தாகி இருப்பதால் என் சமுதாய மக்கள் மட்டும் பயன் அடையப் போவதில்லை, நாடார் கோனார் என அனைத்து சமுதாய மக்களுக்கும் பலன் கிடைக்கப் போகிறது.

தனிப்பட்ட முறையில் வன்னிய மக்களுடன் எனக்கு எந்த பகையும், மோதலும் இல்லை என்றார். அண்மைக் காலமாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி திரைப்படத்தில் கவனம் செலுத்துகிறீர்களே என கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்துள்ள அவர், இதுவரை 140 படங்களில் நடித்துள்ளேன். ஐந்து வருடங்கள் எம்எல்ஏவாக இருந்திருக்கிறேன் ஆனால் இப்போதும் கூட வாடகை வீட்டில் தான் குடியிருந்து வருகிறேன். ஏற்கனவே இருந்த வீட்டை சினிமாவில் நஷ்டம் ஏற்பட்டதால் விற்று விட்டேன் இதெல்லாம் என்னுடைய சொந்த பிரச்சனை, அரசியலை நான் தொழிலாக பார்த்திருந்தால் கல்குவாரி, கட்டப்பஞ்சாயத்து, ரியல் எஸ்டேட் என வசதியாக வாழ்ந்து இருக்க முடியும். அதனால் இப்போது நடித்து தான் சம்பாதிக்க வேண்டும் என்று அவசியம் உள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 

PREV
click me!

Recommended Stories

தேமுதிக யாருடன் கூட்டணி? 'முடிவெடுத்து விட்டேன்'.. ஆனால்?? சஸ்பென்ஸ் வைத்த பிரேமலதா! முக்கிய அறிவிப்பு!
ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில் மத்திய பட்ஜெட் தாக்கல்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!