
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் விஷாலுக்கு ஆதரவு தெரிவித்த வேலு என்பவரை மதுசூதனன் தரப்பினர் மிரட்டியதற்கான ஆடியோ ஆதாரத்தை நடிகர் விஷால் வெளியிட்டார். இதைதொடர்ந்து உண்மைக்கு மாறாக விஷால் பேசி வருவதாகவும் இதற்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும் மதுசூதனன் தரப்பை சேர்ந்த ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
சென்னை, ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட நடிகர் விஷால் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். இந்த நிலையில் தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவியில் இருந்து விஷால் விலக வேண்டும் என்று கூறி தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில் இயக்குநர் சேரன் உள்ளிட் பலர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தயாரிப்பாளர் சங்க தேர்தலில் விஷால் போட்டியிட்டு வெற்றி பெற்று 8 மாதங்கள் ஆகியும் இது வரை எந்த நன்மையையும் செய்யாத நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், விஷால் போட்டியிட வேண்டுமா? என சேரன் கேள்வி எழுப்பி இருந்தார்.
நேற்று மாலை முதல் நடைபெற்று வரும் இந்த உள்ளிருப்பு போராட்டத்துக்கு நடிகர் ராதாரவி, நடிகை ராதிகா, இயக்குநர்கள் டி.ராஜேந்தர், எஸ்.ஏ.சந்திரசேகர் ஆதரவு தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் நடிகர் விஷால், வேட்புமனுவில் 2 போலி கையெழுத்துக்கள் உள்ளதாகவும், சொத்து கணக்கு விவரங்கள் முறையாக குறிப்பிட்டதாலும் அவருடைய மனு தேர்தல் அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டது.
இதையடுத்து தண்டையார் பேட்டை சென்ற விஷால் தமது ஆதரவாளர்களுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இரண்டாவது முறையாக தேர்தல் அதிகாரியிடம் பேச்சுவார்த்தை நடத்திய விஷால் தகுந்த வீடியோ ஆதாரமும், ஆடியோ ஆதாரமும் இருப்பதாக தெரிவித்தார்.
இந்நிலையில், மிரட்டப்பட்டதாக கூறப்படும் வேலு என்பவரிடம் தான் பேசிய ஆடியோவை நடிகர் விஷால் வெளியிட்டார்.
இதைதொடர்ந்து உண்மைக்கு மாறாக விஷால் பேசி வருவதாகவும் இதற்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும் மதுசூதனன் தரப்பை சேர்ந்த ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
மேலும் சம்பந்தபட்ட பெண்ணே மண்டல அலுவலகத்திற்கு நேரடியாக சென்று புகார் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.