எங்ககிட்ட சிசிடிவி ஃபுட்டேஜ் இருக்கு... எங்கவேணா போவோம்... - திண்டுக்கல்லுக்கு  சவால் விட்ட டிடிவி...!

Asianet News Tamil  
Published : Sep 23, 2017, 03:10 PM ISTUpdated : Sep 19, 2018, 01:13 AM IST
எங்ககிட்ட சிசிடிவி ஃபுட்டேஜ் இருக்கு... எங்கவேணா போவோம்... - திண்டுக்கல்லுக்கு  சவால் விட்ட டிடிவி...!

சுருக்கம்

We have CCTV footage to be treated for Jayalalitha and it can not be released without Sasikalas approval DDV Dinakaran said.

ஜெயலலிதாவுக்கு சிகிச்சை பெற்றதற்கான சிசிடிவி காட்சிகள் எங்களிடம் உள்ளது எனவும் சசிகலா ஒப்புதல் இல்லாமல் அதை வெளியிட முடியாது எனவும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 75 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

இதனிடையே ஜெயலலிதா நலமாக உள்ளதாகவும், பூரண நலம் பெற்று வருகிறார் எனவும், இட்லி சாப்பிடுகிறார் எனவும் பல தமிழக அமைச்சர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுக்காமல் இல்லை. 

இதையடுத்து ஜெ மரணத்தில் பல மர்மங்கள் உள்ளதாகவும் அவை விசாரிக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்தது. சசிகலாவுடன் இருந்த பன்னீர்செல்வமே இதுகுறித்து விசாரணை கமிஷன் வேண்டும் என போராடி வந்தார். 

ஆனால் தற்போது எடப்பாடி, சசிகலா தரப்பு இரண்டாக பிரிந்து கிடக்கிறது. இதைதொடர்ந்து எடப்பாடி ஒபிஎஸ்சுடன் கைகோர்த்து சசிகலாவுக்கு எதிராக திரும்பியுள்ளார். 

தமிழக அமைச்சரவையும் எடப்பாடிக்கு சப்போர்ட் செய்து வருகிறது. இந்நிலையில், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், மருத்துவமனையில் ஜெயலலிதாவை பார்த்ததாகவும் அவர் இட்லி சாப்பிட்டதாவும்  பொய் கூறியதாக தெரிவித்தார். 

மேலும், சசிகலாவைத் தவிர மற்ற யாரும் ஜெயலலிதாவை பார்க்க அனுமதிக்கப்படவில்லை எனவும் அப்போது கூறிய பொய்க்காக மன்னிப்பு கேட்பதாகவும் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்து பேசிய டிடிவி தினகரன், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை பெற்றதற்கான சிசிடிவி காட்சிகள் எங்களிடம் உள்ளது எனவும் சசிகலா ஒப்புதல் இல்லாமல் அதை வெளியிட முடியாது எனவும் தெரிவித்தார். 

PREV
click me!

Recommended Stories

ஓ.பி.எஸ்- டிடிவி.தினகரனுக்கு அமித் ஷா போடும் முட்டுக்கட்டை..! தவெகவுக்கு செக் வைக்கும் அமமுக..!
திமுக மீது தவெகவின் திடீர் கரிசனம்.. டெல்லியில் நடந்த மனமாற்றம்..! அடியோடு மாறிய நிர்வாகிகள்..!