'அந்த அதிகாரம் எங்களுக்கு இல்லையே'..! 7 பேர் விடுதலையில் கைவிரித்த தமிழக அரசு..!

By Manikandan S R SFirst Published Feb 12, 2020, 4:27 PM IST
Highlights

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யும் அதிகாரம் தங்களுக்கு இல்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு பேரறிவாளன் உட்பட 7 பேர் கடந்த 28 ஆண்டுகளாக சிறையில் இருக்கின்றனர். அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என தமிழகத்தில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 7 பேர் விடுதலைக்கான நகர்வை சட்டமன்றத்தில் முன்னெடுத்தார்.

அவர் மறைவுக்கு பிறகு தற்போதைய அதிமுக அரசு அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியுள்ளது. ஆளுநருக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு பல மாதங்கள் கடந்து விட்ட நிலையில் இப்போது வரையிலும் எந்த முடிவையும் ஆளுநர் அறிவிக்கவில்லை. பல்வேறு தரப்பினரும் 7 விடுதலையை ஆளுநர் உடனடியாக அறிவிக்க வேண்டும் என தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்தநிலையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யும் அதிகாரம் தங்களுக்கு இல்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது. விடுதலை செய்வது தொடர்பான தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நாளில் இருந்து தான் சட்டவிரோதமாக சிறையில் வைக்கப்பட்டிருப்பதாக நளினி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அதுதொடர்பான வழக்கில் பதிலளித்த தமிழக அரசு, 7 பேரை விடுதலை செய்யலாம் என ஆளுநருக்கு பரிந்துரை மட்டுமே செய்யப்பட்டிருப்பதாகவும் உத்தரவாக பிறப்பிக்க அரசுக்கு அதிகாரம் இல்லை எனவும் தெரிவித்துள்ளது. 

இதையடுத்து நளினி சட்டவிரோதமாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறாரா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்ற நீதிமன்றம் விசாரணையை 18 ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

'வெறுப்பு அரசியலுக்கு டெல்லி கொடுத்த தண்டனை'..! பாஜகவை தாறுமாறாக விமர்சித்த ஜவாஹிருல்லா..!

click me!