தமிழக மக்களுக்கு எச்சரிக்கை..!! அடுத்த 48 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் நடக்கப்போகிற தரமான சம்பவம்..!!

Published : Oct 03, 2020, 12:58 PM IST
தமிழக மக்களுக்கு எச்சரிக்கை..!! அடுத்த 48 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் நடக்கப்போகிற தரமான சம்பவம்..!!

சுருக்கம்

அக்டோபர் 03 ஆம் தேதி அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று 45-55  கிலோமீட்டர்  வேகத்தில் வீசக்கூடும், அக்டோபர் 03 முதல்   அக்டோபர் 05 வரை வட மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய ஒடிசா கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று 40-50  கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்,

ஆந்திரா மற்றும் ஒடிசா கடலோரப் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம், தர்மபுரி  மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் ஓரிரு இடங்களில்  இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்  ஓரளவு  மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்ஸியசையும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்ஸியசையும் ஒட்டி பதிவாகக்கூடும்.கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஏற்காடு (சேலம்) 9 சென்டி மீட்டர் மழையும், மே.மாத்தூர் (கடலூர்) 6 சென்டி மீட்டர் மழையும், நெய்வேலி (கடலூர்), வேப்பூர் (கடலூர்) தலா 5 சென்டிமீட்டர் மழையும்,  சேலம், பாப்பிரெட்டிப்பட்டி (தர்மபுரி), கடலூர் தலா 4 சென்டி மீட்டர் மழையும், கொள்ளிடம் (நாகப்பட்டினம்), தர்மபுரி), உளுந்தூர்பேட்டை (கள்ளக்குறிச்சி ) தலா 3 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

அக்டோபர் 03 ஆம் தேதி அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று 45-55  கிலோமீட்டர்  வேகத்தில் வீசக்கூடும், அக்டோபர் 03 முதல் அக்டோபர் 05 வரை வட மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய ஒடிசா கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று 40-50  கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும், மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள் என எச்சரிக்கப்பட்டுள்ளது. 
 

PREV
click me!

Recommended Stories

எடப்பாடியின் தூக்கத்தை கெடுத்த Exit POLL முடிவுகள்.! உண்மை நிலவரம் மாறும் என மார்த்தட்டும் தளபதி.! குத்தாட்டம் போடும் திமுக தொண்டர்கள்.!
Exit Poll 2026: மீண்டும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.! தளபதி விஜய் கையில் 24 முத்துக்கள்.! அதிமுகவின் நிலை என்ன தெரியுமா?