அமைச்சர் செந்தில்பாலாஜி கைதுக்கு கொஞ்சம் பொறுமையாக இருங்கள், அமலாக்கத் துறையின் வேறு விஷயத்தில் பிஸியாக உள்ளது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். அமைச்சர் செந்தில்பாலாஜி அண்ணாமலை இடையே கருத்துப் போர் நடந்து வரும் நிலையில் அண்ணாமலை இவ்வாறு கூறியுள்ளார்.
அமைச்சர் செந்தில்பாலாஜி கைதுக்கு கொஞ்சம் பொறுமையாக இருங்கள், அமலாக்கத் துறையின் வேறு விஷயத்தில் பிஸியாக உள்ளது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். அமைச்சர் செந்தில்பாலாஜி அண்ணாமலை இடையே கருத்துப் போர் நடந்து வரும் நிலையில் அண்ணாமலை இவ்வாறு கூறியுள்ளார்.
திமுக ஆட்சிக்கு வந்ததும் முதல் பல்வேறு அதிரடி திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அத்திட்டங்கள் பெரும்பாலும் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்று வருகிறது. அதேநேரத்தில் திமுக அரசின் நடவடிக்கைகள் ஒவ்வொன்றையும் தமிழக பாஜக மற்றும் அதிமுக கடுமையாக விமர்சித்து வருகின்றன, தமிழகத்தின் எதிர்க்கட்சியான அதிமுக இருந்தாலும், மக்கள் மன்றத்தில் எதிர்க்கட்சி பாஜகதான் என்ற பிம்பத்தை உருவாக்கும் முயற்சியில் அக்கட்சித் தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வரிசையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழக அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்.
முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி அமைச்சர்கள் வரை ஒவ்வொருவர் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். அடிக்கடி ஆளுநரை சந்தித்து திமுக அரசுக்கு எதிராக புகார் கூறி வருகிறார், அதிலும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக தொடர்ந்து அண்ணாமலை பேசி வருகிறார், மின்வாரியத்தில் பல்வேறு ஊழல்கள் நடப்பதாக தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். அரசின் மின் உற்பத்தியை அதிகப்படுத்த்தாமல் தனியாரிடமிருந்து அதிக விலைக்கு மின்சாரத்தை செந்தில்பாலாஜி கொள்முதல் செய்வதாகவும் அவர் குற்றம்சாட்டி வருகிறார்.
இதையும் படியுங்கள்: திருப்பதி கோவில் வரலாற்று சாதனை.. இதுவரை இல்லாத அளவு குவிந்த உண்டியல் காணிக்கை.. எவ்வளவு கோடி தெரியுமா
தமிழகத்தைச் சேர்ந்த ஒரு நொடிந்து போன தனியார் நிறுவனத்திடமிருந்து 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் கோடி ரூபாய் ஆர்டரை தமிழக மின்சாரத்துறை மேற்கொள்ள உள்ளது என்றும், இதில் ஆளும் கட்சியைச் சேர்ந்த சிலருக்கு லாபத்தை ஏற்படுத்த முயற்சிகள் நடக்கிறது என்றும் அண்ணாமலை குற்றம் சாட்டினார், அதைத்தொடர்ந்து நிலக்கரி பற்றாக்குறை விவகாரத்தில் அண்ணாமலை- செந்தில் பாலாஜி இடையே தொடர்ந்து கருத்து மோதல் இருந்து வருகிறது. அதேபோல தூத்துக்குடி அனல் மின் நிலையம் ஒப்பந்ததாரர்களுக்கு பல மாதங்களாக எந்த தொகையும் வழங்காமல் இருந்து வந்த நிலையில் திடீரென 29.64 கோடி ரூபாய் வழங்கப்பட்டதன் நோக்கம் என்ன என்றும் செந்தில் பாலாஜிக்கு எதிராக அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.
இதையும் படியுங்கள்: உறவினர்களுக்கு டெண்டர்..! இபிஎஸ் செயல்பாட்டால் அரசுக்கு இழப்பு..! ஆர்.எஸ்.பாரதி உச்ச நீதிமன்றத்தில் மனு
அதைத்தொடர்ந்து மின்வாரியத்தில் ஒப்பந்த தாரர்களின் பெயர்களையும் அவர்களது வங்கி கணக்கில் போடப்பட்ட பணத்தின் விவரத்தையும் அண்ணாமலை சமூகவலைதளத்தில் பகிர்ந்தார். அதாவது ஒவ்வொரு முறையும் மின்சார துறை சார்பில் ஏதாவது ஒரு குற்றச்சாட்டை முன்வைத்து அண்ணாமலை செந்தில் பாலாஜிக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார். ஒவ்வொரு முறையும் அண்ணாமலை வைத்தவரும் குற்றச்சாட்டிற்கு செந்தில்பாலாஜி பேட்டிகள் மூலமாகவும், சமூக வலை தளத்திலும் பதிலடி கொடுத்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மின்துறையில் ஊழல் நடப்பதாக குற்றம் சாட்டும் அண்ணாமலை உண்மையான ஆண்மகனாக இருந்தால் ஆதாரங்களுடன் என்மீது வழக்கு தொடுக்கடும் என செந்தில் பாலாஜி எச்சரித்து பேசினார்.
இது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இன்று பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் இந்தியா நாட்டின் 75வது சுதந்திர விழாவை முன்னிட்டு இல்லந்தோறும் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என பிரதமர் வைத்த கோரிக்கையை, கட்சி பாகுபாடின்றி அனைவரும் நிறைவேற்ற முன்வரவேண்டும் என அண்ணாமலை வேண்டுகோள் விடுத்தார். அப்போது செந்தில் பாலாஜி தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அமைச்சர் செந்தில்பாலாஜி கைதுக்கு கொஞ்சம் பொறுமையாக இருங்கள், அமலாக்கத்துறை வேறு ஒரு விஷயத்தில் பிஸியாக உள்ளது எனக் கூறினார். இது செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் மற்றும் திமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது