2 நாள் பொறுங்க.. விவரமா சொல்றேன்.. அண்ணாமலை குறித்த கேள்விக்கு பக்குவமா பதில் சொன்ன சேகர்பாபு.

Published : Mar 26, 2022, 12:06 PM IST
2  நாள் பொறுங்க.. விவரமா சொல்றேன்.. அண்ணாமலை குறித்த கேள்விக்கு பக்குவமா பதில் சொன்ன சேகர்பாபு.

சுருக்கம்

இதுதொடர்பாக ஏற்கனவே பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியிருந்த நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குறித்து பேசிய அவர், தனது இருப்பைக் காட்டிக் கொள்ளத்தான் சீமான் போன்ற அரசியல் கட்சித் தலைவர்கள் சிலர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்றார். 

இந்து சமய அறநிலையத் துறையில் 100 கோடி நிதி எந்தெந்த திட்டத்திற்கு செலவு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்த அண்ணாமலையின் கேள்விக்கு செவ்வாய் அல்லது புதன் கிழமை அறிக்கை வாயிலாக விளக்கும் அளிக்கப்படும் என இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். கடந்த தேர்தலில் பெற்ற வெற்றியை விட எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி கட்சியினர் அனைவரும் ஒன்றிணைந்து 40 சதவீதம் கூடுதல் வெற்றியை பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்தது முதல் பாஜக திமுகவையும் அதன் அரசியல் மிகக் கடுமையாக விமர்சித்து வருகிறது.

குறிப்பாக மின்சாரத் துறை, இந்து சமய அறநிலை  துறைகளை குறிப்பிட்டு பாஜகவினர் குற்றம் சாட்டி வருகின்றனர். அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அமைச்சர்கள் மீது அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்து வரும் நிலையில் இந்து சமய அறநிலைத்துறை ஒதுக்கப்பட்டுள்ள 100 கோடி நிதியை எந்தெந்த திட்டத்திற்கு எவ்வளவு செலவு செய்யப்பட்டுள்ளது என கேள்வி எழுதியிருந்தார். இந்நிலையில் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு அதற்கு பதிலளிக்கும் வகையில் அடுத்த வாரம் அதற்காக விரிவாக அறிக்கை வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார். சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் 98 ஆவது வட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கவுன்சிலர் பிரியதர்ஷினி அலுவலக திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

அதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 98வது வார்டில் வெற்றி பெற்ற இளம் வேட்பாளர் பிரியதர்ஷினிக்கு வாழ்த்துக்கள் என்றார், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இப்போது பெற்ற வெற்றியை காட்டிலும் 40 சதவீதம் கூடுதல் வெற்றி பெறவேண்டும் என்ற அடிப்படையில் அனைவரும் பணியாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார். அனைத்து மாமன்ற உறுப்பினர்களும் இணைந்து சென்னையை சிங்கார சென்னையாக மாற்ற வேண்டும் என்றார். பட்ஜெட்டில் இந்து சமய அறநிலையத்துறைக்கு ஒதுக்கப்பட்ட 100 கோடி ரூபாய் எந்தெந்த திட்டங்களுக்கு எவ்வளவு செலவு செய்யப்பட்டது, எந்தெந்த திட்டங்களுக்கு எவ்வளவு செலவு செய்ய இருக்கிறோம் என்பது குறித்து வரும் செவ்வாய் அல்லது புதன் கிழமைகளில் அறிக்கை வழங்க உள்ளோம் என்றார்.

இதுதொடர்பாக ஏற்கனவே பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியிருந்த நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குறித்து பேசிய அவர், தனது இருப்பைக் காட்டிக் கொள்ளத்தான் சீமான் போன்ற அரசியல் கட்சித் தலைவர்கள் சிலர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்றார். அரசியல் தளத்தில் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் நாகரீகமாக பேச வேண்டுமென்றும், திருமணமாவதற்கு முன்பே பெண்கள் பொருளாதார ரீதியில் தங்களை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்கிற அடிப்படையில் தான் தாலிக்கு தங்கம் திட்டம் ரத்து செய்யப்பட்டு உயர்கல்வியில் பெண்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது என்றார். 
 

PREV
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai: மகளிருக்கு ரூ.2,500.! புது ரூல்ஸ் வந்தாலும் இவங்களுக்கெல்லாம் கண்டிப்பா கிடைக்கும்.!
C.Vijayabaskar Join TVK: டெல்டாவே காலியாகிறது.! எடப்பாடிக்கு சவால்விட்ட விஜயபாஸ்கர்.! மாமல்லபுரத்தில் மாஸ் காட்டிய ஜெயலலிதா விசுவாசி.!