பாஜக ஆட்சிக்கு ஆப்பு ரெடி !! மோடி அரசை கவிழ்க்க கைகோர்க்கும் எதிரும் புதிரும் !!

 
Published : Mar 16, 2018, 09:52 AM ISTUpdated : Sep 19, 2018, 02:04 AM IST
பாஜக ஆட்சிக்கு ஆப்பு ரெடி !! மோடி அரசை கவிழ்க்க கைகோர்க்கும் எதிரும் புதிரும் !!

சுருக்கம்

vote of confidence against BJP by YSR congress and TDP

மத்தியில் ஆளும் மோடி அரசுக்கு எதிராக  ஆந்திராவின் தெலுங்கு சேதமும்,  ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியும் இணைந்து  நம்பிக்கை இல்லா தீர்மானத்தை  கொண்டு வர முடிவு செய்துள்ளன. திரணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சிகளும் இதில் பங்கேற்கும் என எதிர்ப்ர்க்கப்படுகிறது.

ஆந்திர மாநிலம் தெலுங்கானா, ஆந்திரா என இரண்டாக பிரிக்கப்பட்டதையடுத்து, ஆந்திர மாநிலத்து சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டுமென ஆந்திராவைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன. ஆனால், மத்திய அரசு அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.



இதையடுத்து, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 9 எம்பிக்களும் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளனர். இது  இன்று  நடைபெறும் கூட்டத்தில் முன்மொழியப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தை குறைந்தபட்சம் 50 எம்பிக்கள் முன்மொழிய வேண்டும் என்பதால், ஏற்கனவே பாஜக அரசின் மீது அதிருப்தியில் உள்ள தெலுங்கு தேச கட்சியும் இந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு ஆதரவு  அளிக்கும் என தெரிகிறது. இக்கட்சிக்கு மக்களவையில் 16 எம்.பி.க்களும், மாநிலங்களவையில் 6 எம்.பி.ககளும் உள்ளனர்.

இதுமட்டுமின்றி பாஜக கட்சியின் எதிரிக்கட்சிகளான சமாஜ்வாதி கட்சி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் ஆதரவையும் ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி கோரியுள்ளது.

நாடாளுமன்றத்தில் 274 உறுப்பினர்களைக் கொண்டு, தனிப்பெரும்பான்மையைப் பெற்றுள்ள பாஜக இந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எளிதாக முறியடிக்கும் என்ற போதிலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கு  ஓர் ஆண்டு காலமே உள்ள நிலையில், மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் முன்மொழியப்படுவது பாஜகவுக்கு  மிகப்பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது.

ஆந்திராவைப் பொறுத்தவரை தெலுங்கு தேசமும, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியும் எதிரும், புதிருமாக இருந்தாலும் தங்களது மாநிலத்தின் நம்மைக்காக கைகோர்த்திருக்கிறது.

PREV
click me!

Recommended Stories

விஜய்யும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்.. மதுரையில் திருமா பரபரப்பு பேச்சு
ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!