
சென்னை, ஆர்.கே.நகர் தேர்தலில் விஷாலின் வேட்புமனுவை ஏற்க, அதிமுக, திமுக போன்ற கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மேலும், விஷாலின் மனுவில், சொத்து கணக்கு வழக்கு முறையாக இல்லை என்பதால், மனு மீதான பரிசீலனை இழுபறியில் உள்ளது.
நடிகர் சங்க நிர்வாகியாகவும், தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் உள்ள நடிகர் விஷால், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தார். இதற்கு தமிழ் திரையுலகில் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியிருக்கிறது. அந்நிலையில், விஷால் நேற்று தனது வேட்புமனுவையும் தாக்கல் செய்தார்.
சென்னை, தண்டையார்பேட்டையில் உள்ள அலுவலகத்தில் விஷால் வேட்புமனு தாக்கல் செய்யும் அதே நேரத்தில், தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில் அவருக்கு எதிராக சேரன் உள்ளிட்ட பலர் கருத்து தெரிவித்து வந்தனர்.
நடிகர் விஷால், தயாரிப்பாள்ர சங்க தலைவராக வந்த பிறகு எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று கூறியிருந்தார். நேற்று மாலை முதல் தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில் சேரன் உள்ளிட்ட பலர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று இரண்டாவது நாளாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வரும் வேளையில், விஷால் நேரில் வந்து பேச வேண்டும் என்று சேரன் தரப்பு கூறியிருந்தது. இந்த நிலையில் அங்கு வந்த விஷால் தரப்பினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் ஆனாலும், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்து விட்டது.
இந்த நிலையில் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் மனு பரிசீலனை இன்று நடைபெற்று வருகிறது. திமுக, அதிமுக, பாஜகவினருடைய வேட்புமனு எடுத்துக்கொள்ளப்பட்டது. தொடர்ந்து வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. நடிகர் விஷாலின் வேட்புமனு, தேர்தல் அதிகாரிகள் பரிசீலனை செய்தனர். அப்போது, விஷால் அளித்துள்ள உறுதிமொழி, சொத்து கணக்கு விவரங்கள் முறையாக இல்லை என்று
கூறி அதமுக மற்றும் திமுக தரப்பு கூறியுள்ளது.
இதனால், விஷாலின் வேட்புமனு மீதான பரிசீலனை இழுபறியில் உள்ளது. விஷாலின் வேட்புமனு ஏற்கப்படுமா? அல்லது நிராகரிக்கப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.