அமைச்சரை நம்பாமல் பாமகவை நம்பிய முதல்வர்... சீறும் சி.வி.சண்முகம்..!

By vinoth kumarFirst Published Sep 29, 2019, 5:01 PM IST
Highlights

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அமைச்சரை நம்பாமல் பாமக நிர்வாகிகளை முதல்வர் எடப்பாடி நம்பி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பாமக நிர்வாகளிடம் அமைச்சர் அனுசரித்து செல்லுமாறும் முதல்வர் கூறியதால் சி.விசண்முகம் கடும் கோபத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அமைச்சரை நம்பாமல் பாமக நிர்வாகிகளை முதல்வர் எடப்பாடி நம்பி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பாமக நிர்வாகளிடம் அமைச்சர் அனுசரித்து செல்லுமாறும் முதல்வர் கூறியதால் சி.விசண்முகம் கடும் கோபத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 21-ம் தேதி நடைபெறுகிறது. இத்தேர்தலில் அதிமுக 2 தொகுதிகளில் போட்டியிடுகிறது. விக்கிரவாண்டி தொகுதியில் சி.வி.சண்முகத்தின் தீவிர ஆதரவாளரான முத்தமிழ்ச்செல்வனும், நாங்குநேரி தொகுதியில் ரெட்டியார்பட்டி வெ.நாராயணன் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் அதிமுக தீவிரம் காட்டி வருகிறது. விக்கிரவாண்டி தொகுதிக்கு தேர்தல் பணியில் அதிமுக சார்பாக அமைச்சர் சி.வி.சண்முகத்தை அதிமுக தலைமை நியமித்துள்ளது. 

இந்நிலையில், விக்கிரவாண்டி தொகுதியில் வன்னியர் வாக்குகள் அதிகம் இருப்பதால் பாமக கட்சியின் ஆதரவை அதிகம் எதிர்பார்த்து அதிமுக தலைமை உள்ளது. முக்கியமாக கடந்த சட்டப்பேரவை தேர்தலில் தனியாக நின்று பாமக 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்றது. இவற்றையெல்லாம் கணக்கில் வைத்துக்கொண்டு எப்படியாவது இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுவிடலாம் என்று முதல்வர் கணக்குபோட்டு வைத்துள்ளார்.

ஆனால், கடந்த 2006-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலின்போது சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகத்தின் உறவினர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலைக்கும் ராமதாசுக்கும் தொடர்பு இருப்பதால் அமைச்சர். சி.வி.சண்முகத்திற்கும் இடையே தொடர்ந்து கடும் மோதல் போக்கு இருந்து வருகிறது. பாமக கட்சி தலைமைக்கும், அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கும் மோதல் நீடித்து வருவதால் அவர்களுடன் தேர்தல் பணியில் அமைச்சர் ஈடுபடுவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இதனால் பாமக நிர்வாகிகளை தனியாக சந்தித்து அவர்களுக்கு வேண்டியதை செய்ய முதல்வர் எடப்பாடி முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதோடு பாமக கட்சிக்கு செல்வாக்கு இருப்பது போல் விசிக கட்சிக்கும் செல்வாக்கு இருப்பதால், பாமக கட்சி வாக்கினை முழுவதும் பெற வேண்டிய கட்டாயத்தில் அதிமுக தள்ளப்பட்டுள்ளது. இதனால் பாமக நிர்வாகிகளுடன், அமைச்சரை அனுசரித்து தேர்தல் பணியை மேற்கொள்ள எடப்பாடி உத்தரவு போட்டதாக கூறப்படுகின்றது. இதனால், அமைச்சர் சி.வி.சண்முகம் முதல்வர் கடும் கோபத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

click me!