தளபதி விஜய் கூலா இருக்கிறார்! நார்மலா இருக்கிறார்! டிஸ்டர்பே ஆகலை: ஏன் இந்த பில்ட் - அப்கள்?

By Vishnu PriyaFirst Published Feb 13, 2020, 7:25 PM IST
Highlights

 விஜய் ரொம்ப கூலா இருக்கிறார். ரெய்டால் அவர் எந்த வகையிலும் டிஸ்டர்ப் ஆகலை. அவரோட ரெகுலர் பணிகளை இயல்பா பார்க்க ஆரம்பிச்சுட்டார். தொடர்ந்து நெய்வேலி ஷூட்டிங்கில் கலந்துகிட்டு, முடிச்சும் கொடுத்துட்டார். எல்லாமே நார்மலா, நல்லா போயிட்டிருக்குது. இதைத்தாண்டி அரசியல், அதுயிதுன்னு எதுவும் சொல்றதுக்கு ஒண்ணுமில்லை!
 

*    கொரனா வைரஸ் குறித்து நம் நாட்டில் ஒரு வித அச்சம் நிலவுகிறது. வெளிநாட்டில் இருந்து வரும் பறவைகளால் இது பரவுவதாக பீதியை கிளப்பிவிடுகின்றனர். பறவைகள் குறிப்பிட்ட காலத்தில் ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு இடம் பெயர்வது சகஜம். அதனால் அதையும், இதையும் தொடர்பு படுத்த வேண்டாம். 
-    பிரகாஷ் ஜவடேகர் (மத்தியமைச்சர்)

*    இலங்கை தமிழர் விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் பாரபட்சமாக நடக்கின்றன. குடியுரிமை திருத்த சட்டத்தில் இலங்கை தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். இங்குள்ள இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை கிடையாது, இலங்கை பிரதமர் இங்கு வந்து செல்கிறார். 
-    நல்ல கண்ணு (கம்யூனிஸ் மூத்த தலைவர்)

*    மக்களுக்காக நான்! என ஜெயலலிதா வாழ்ந்து வந்தார். அவர் வழியிலான எங்களின் அரசு, மக்களுக்காக நாம்! மக்களால் நாம்! என்ற உறுதியில் செயல்பட்டு வருகிறது. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 11 மருத்துவ கல்லூரிகளை எங்கள் அரசு கொண்டு வந்துள்ளது. 
- ஓ.பன்னீர் செல்வம் (தமிழக துணை முதல்வர்)

*    காவிரி டெல்டா விவசாயிகளின் நலனின் அக்கறை இருப்பது போல், முதல்வர் இ.பி.எஸ். நாடகத்தை அரங்கேற்றியுள்ளார். உண்மையிலேயே அவருக்கு அக்கறை இருக்குமானால், டெல்டா பகுதிகளில் ‘ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்த விடமாட்டோம்!’ என சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றட்டும் பார்க்கலாம். 
-    கே.என்.நேரு (தி.மு.க. முதன்மை செயலாளர்)

*    தி.மு.க. காலத்தில் தமிழக மண்ணில் விதைக்கப்பட்ட பல களைச்செடிகளை அ.தி.மு.க. காலத்தில் அகற்றி வருகிறோம். இதுவரை 35க்கும் மேற்பட்டோர் குரூப் - 4 விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். எதிர்காலத்தில், சிறு தவறும் நிகழாத வண்ணம் நூறு சதவீதம் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 
-    ஜெயக்குமார் (தமிழக அமைச்சர்)

*    முஸ்லிம்கள் எதற்காக குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து போராடுகின்றனர் என்பது புரியவில்லை. பிறந்தது முதல் இந்தியாவில் இருக்கும் முஸ்லிம்களை யார் நாட்டை விட்டு துரத்திட போகின்றனர்? ஆனால் பாக்கிஸ்தான் மற்றும் வங்க தேசத்தினரை துரத்த வேண்டும். அதில் சிறிது கூட சமரசம் செய்துகொள்ள கூடாது. 
-    ராஜ் தாக்கரே (நவ நிர்மாண் சேனா தலைவர்)
*    கொண்டாடக் கூடிய அளவுக்கு பெரியார் ஒன்றும் சமூக சீர்திருத்த போராளி அல்ல. அவரைவிட மிகப்பெரிய சமூக சீர்திருத்தப் போராளியாக திகழ்ந்தவர் அய்யா வைகுண்டர்தான். அவர்தான் அனைத்து சமூக மக்களுக்கும் சம நீதி கிடைக்க போராடியவர். 
-    சசிகலா புஷ்பா (மாநிலங்களவை எம்.பி.)

*    தி.மு.க. இப்போது ‘ஏ! பி! சி!’ என மூன்று டீம்களை அமைத்து ரஜினியை விமர்சித்து வருகிறது. தமிழ் ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், அரசியல் ஆலோசகர்கள் சிலரை ரஜினிக்கு எதிராக களம் இறக்கி இருக்கிறது. ஆனால் இதையெல்லாம் பற்றி ரஜினி கவலைப்பட போவதில்லை. இவர்கள் கூறும் விமர்சனங்கள் அத்தனைக்கும் ஒரே வரியில் ரஜினி பதில் தந்துவிடுவார்.
-    கராத்தே தியாகராஜன் (ரஜினியின் நண்பர்)

*    விஜய் ரொம்ப கூலா இருக்கிறார். ரெய்டால் அவர் எந்த வகையிலும் டிஸ்டர்ப் ஆகலை. அவரோட ரெகுலர் பணிகளை இயல்பா பார்க்க ஆரம்பிச்சுட்டார். தொடர்ந்து நெய்வேலி ஷூட்டிங்கில் கலந்துகிட்டு, முடிச்சும் கொடுத்துட்டார். எல்லாமே நார்மலா, நல்லா போயிட்டிருக்குது. இதைத்தாண்டி அரசியல், அதுயிதுன்னு எதுவும் சொல்றதுக்கு ஒண்ணுமில்லை!
-    புஸ்ஸி ஆனந்த் (விஜய் மக்கள் மன்ற தலைமை நிர்வாகி)

tags
click me!