"அத்தனை காங். எம்எல்ஏக்களும் நாளை சட்டசபை வரவேண்டும்" - விஜயதரணி உத்தரவு

 
Published : Feb 17, 2017, 02:14 PM ISTUpdated : Sep 19, 2018, 01:35 AM IST
"அத்தனை காங். எம்எல்ஏக்களும் நாளை சட்டசபை வரவேண்டும்" - விஜயதரணி உத்தரவு

சுருக்கம்

அதிமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படட எடப்பாடி பழனிசாமி, ஆளுநர் அழைப்பின் பேரில் நேற்று தமிழக முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். 124 எம்எல்ஏக்கள் அவருக்கு ஆதரவளிப்பதாக கூறப்படுகிறது,

அவருக்கு எதிராக களமிறங்கும் ஓபிஎஸ் தரப்பினரிடம் 11 எம்எல்ஏக்கள் உள்ளனர்.

இதனிடையே நாளை எடப்பாடி பழனிசாமி பெரும்பான்மையை நிருபிக்க உள்ளார்.

இப்பிரச்சனையில் திமுக என்ன செய்யப்போகிறது என்பதை அக்கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார். எந்த அணிக்கும் ஆதரவு அளிக்கப் போவதில்லை என அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நாளை நடைபெறவுள்ள அரசு மீதான நம்பிக்கை ஓட்டெடுப்பு அனைத்து எம்எல்ஏக்களும் பங்கேற்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் கொறடா விஜயதாரணி அறிவுறுத்தியுள்ளார்.

அதிமுக வைச் சேர்ந்த சசிகலா அணியோ அல்லது ஓபிஎஸ் அணியோ காங்கிரஸ் கட்சியிடம்  ஆதரவி கேட்கவில்லை என விஜயதாரிணி கூறினார். அதே நேரத்தில் திமுக ஆட்சி அமைக்க உரிமை கோரினால் முதரவி அளிக்க காங்கிரஸ் கட்சி தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள்  கூட்டம் சத்தியமூர்த்தி பவனில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. சட்டசபையில் காங்கிரஸ் கட்சிக்கு 8 எம்எல்ஏக்கள் எள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

நான் காமராஜரை பற்றி பேசியதை வதந்தி பரப்புகிறார்கள்..! மன்னிப்புக்கேட்ட முக்தார்..!
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு