"100 வயது வரை உயிர் வாழ்வேன்…" - விஜயகாந்த் உற்சாகம்…!!

First Published Jan 14, 2017, 11:11 AM IST
Highlights

தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஒரு யதார்த்தமான மனிதர். பொது இடங்களில் அவர் பேசுவதும், கட்சித் தொண்டாகளிடம் நடந்து கொள்வதும் பெரும்பாலும் சர்ச்சையை ஏற்படுத்தும்.

அவரது உடல்நிலை குறித்து வதந்திகள் பரவுவதும் வாடிக்கையான ஒன்றுதான். ஆனால் விஜயகாந்த் இதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் சிங்கப்பூர் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்துக்கொண்டார்.

அதேபோல் மிகவும் எளிமையாக இருப்பதிலும் அவரை மிஞ்ச ஆள் இல்லை என்று கூறலாம். அண்மையில் மதுரை அலங்காநல்லுரில் தேமுதிக சார்பில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தில் கலந்து கொள்ளவந்த போது சாதாரணமாக சாலை ஓரத்தில் அமர்ந்து உணவு அருந்தியது தொண்டர்களை நெகிழச் செய்தது.

இந்நிலையில் திருப்போரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட காயார் தேமுதிக சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. இதில் விஜயகாந்த், அவரது மனைவி  பிரேமலதா ஆகியோர் குடும்பத்துடன் கலந்துகொண்டனர்.

பிரேமலதா விஜயகாந்த் கிராமப் பெண்களுடன் இணைந்து பொங்கலிட்டார். பின்பு ஏழை-எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள், பொங்கல் பொருட்கள் வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பேசிய விஜயகாந்த் விவசாயிகளை எனக்கு மிகவும் பிடிக்கும், ஏனென்றால் நானும் விவசாய குடும்பத்தில் இருந்து வந்தவன் தான் என்றார்.

இந்த வீர விழாவில் நடைபெறும்ரேக்ளாரேஸ் எனக்கு மிகவும் பிடிக்கும். அதனால்தான் என் படங்களில் கூட அக்காட்சியை வைத்திருப்பேன் 

என்று தெரிவித்தார்.

என்னால் அதிகம் பேச முடியாது. ஏனென்றால் நான் கீழே குனிந்தேன் என்றால் எனக்கு கண்ணில் தண்ணீர் வந்துவிடும். 

அதனால்தான் பேசுவதில்லை என்று தெரிவித்த விஜயகாந்த்,முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவின்போது ராஜாஜி அரங்கிற்கு  வந்த போதும் கூட கீழே இறங்கும் போது பார்த்து பார்த்து இறங்கி வந்தேன். 

இதை பார்த்த மீடியாக்கள் நான் தள்ளாடுகிறேன் என்று எழுதி விட்டதாக குறிப்பிட்டார்.
அதைபற்றியெல்லாம் எனக்கு கவலை இல்லை. ஏனென்றால் நான் 100 வயது வரை உயிர் வாழ்வேன். எனக்கு எந்த வியாதியும் கிடையாது. என் மனைவி இருக்கும் வரையில் என்னை எந்தவியாதியும் நெருங்காது என உற்சாகத்துடன் குறிப்பிட்டார். விஜயகாந்த்தின் இந்த பேச்சு அவரது தொண்டாகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

click me!