ஏலத்துக்கு வந்த விஜயகாந்தின் 100 கோடி சொத்துக்கள்... தேமுதிகவினர் அதிர்ச்சி..!

By Thiraviaraj RMFirst Published Jun 21, 2019, 11:56 AM IST
Highlights

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வாங்கிய கடனுக்காக விஜயகாந்தின் ரூ.100 கோடி சொத்துகள் ஏலத்துக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வாங்கிய கடனுக்காக விஜயகாந்தின் ரூ.100 கோடி சொத்துகள் ஏலத்துக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

5 கோடியே 52 லட்சத்து 73 ஆயிரத்து 825 ரூபாயை கடனாகப் பெற்றுள்ளார் விஜயகாந்த். இந்தத் தொகை ஸ்ரீஆண்டாள் அழகர் எஜுகேசனல் டிரஸ்ட் பெயரில் வாங்கப்பட்டுள்ளது. இதற்கு ஜாமீந்தாரர்களாக விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா ஆகியோர்  கையெழுத்திட்டுள்ளனர்.

இந்நிலையில் மாமண்டூரில் கல்லூரி அமைந்துள்ள 25 ஏக்கர் நிலத்தை 92 கோடியே 5 லட்சத்து 5 ஆயிரத்து 51 ரூபாய்க்கும்,  சாலிகிராமம் காவேரி தெரு மற்றும் வேதவள்ளி தெருவில் உள்ள 4651 சதுரஅடி மற்றும் 10271 சதுர அடி வணிக வளாகத்தை 4 கோடியே 25 லட்சத்து 84 ஆயிரத்து 849 ரூபாய்க்கும் ஏலத்தில் விட குறைந்த பட்ச கேட்பு விலையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்து விஜயகாந்த் குடியிருக்கும் சாலிகிராமம் கண்ணபிரான் காலனியில் அமைந்துள்ள 3013 சதுர அடி வீட்டை 3 கோடியே 4 லட்சத்து 34 ஆயிரத்து 344 ரூபாய்க்கும் ஏலம் விடுவதாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சென்னை மவுண்ட் ரோடு கிளை அறிவித்துள்ளது. விஜயகாந்தின் 100 கோடிக்கும் அதிகமான மதிப்புக்கொண்ட வீடு மற்றும் சொத்துக்கள் ஏலத்துக்கு வரும் அறிவிப்பு தேமுதிகவினரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.  
 

click me!