நாளை மறுநாள் சென்னை திரும்புகிறார் விஜயகாந்த்… அரசியலில் இனி அதிரடிதான் !!

Published : Feb 14, 2019, 09:02 AM ISTUpdated : Feb 14, 2019, 09:24 AM IST
நாளை மறுநாள் சென்னை திரும்புகிறார் விஜயகாந்த்… அரசியலில்  இனி அதிரடிதான் !!

சுருக்கம்

அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் தேதிமுக தலைவர் விஜயகாந்த்  பிப்ரவரி 16  ஆம் தேதி அதாவது நாளை மறுநாள் , சிகிச்சை முடிந்து சென்னை திரும்புகிறார். இந்த அறிவிப்பை தேமுதிக வெளியிட்டுள்ளது.  

தேமுதிக தலைவர் விஜயகாந்த்  உடல்நலக்குறைவு காரணமாக கடந்த டிசம்பர் மாதம் 18 ஆம் தேதி அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் விஜயகாந்த் பூரண குணமடைந்து நாளை மறுநாள் சென்னை திரும்புகிறார். இதற்கான அறிவிப்பை அக்கட்சி வெளியிட்டுள்ளது. நாளை மறுநாள் காலை 8.30 மணிக்கு விமானம் மூலம் அவர் திரும்புவதாக தேமுதிக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜ காந்த் அடுத்த மாதம் முதல் வாரத்தில்தான் திருப்புவதாக முதலில் தகவல் வெளியாகியிருந்தது. ஆனால் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் முக்கிய முடிவுகள் எடுப்பது தொடர்பாக அவர் முன்கூட்டியே  சென்னை திருப்புகிறார்,.

இதைத் தொடர்ந்து விஜயகாந்த், கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

PREV
click me!

Recommended Stories

அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!
களத்திற்கே வராத விஜய் களத்தை பற்றி பேசலாமா? இடைத்தேர்தல் நடக்கும்போது எங்க போனீங்க..? சீமான் கேள்வி