அந்தம்மா கொஞ்சம் அழிச்சிடுச்சி... இவரு மொத்தமா நம்ம கதைய முடிக்க கூட்டணிக்கு கூப்பிடுறாரா? தினாவை தெறிக்கவிட்ட கேப்டன்

First Published Jul 21, 2018, 10:50 AM IST
Highlights
Vijayakanth reply to Dinakaran alliance


நாடாளுமன்றத் தேர்தலுக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தயாராகிவிட்டது. இதற்காக,  தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு உட்பட்ட 40 நாடாளுமன்றத் தொகுதிகளை ஆறு மண்டலங்களாகப் பிரித்து, அதற்கு மண்டலப் பொறுப்பாளர்களை  நியமித்த தினகரன் திமுக கூட்டணிக்கு எதிராக தமிழகத்திலுள்ள முக்கிய கட்சிகளை ஒன்றிணைத்து பலம் வாய்ந்த கூட்டணியை அமைக்க முயற்சித்து வருகிறார். 

 கடந்த சில நாட்களுக்கு முன்பாக   கேப்டனை சந்திக்க நேரம் கேட்டு தூது அனுப்பியிருக்கிறார் தினா. ஆனால், அவருக்கு இப்போ ஹெல்த் கொஞ்சம் ப்ராப்லமா இருக்கு. அதனால சீக்கிரமே சொல்றோம். அதுக்கு  முன்னாடி உங்களை தளபதி எல்கே.சுதீஷ் உங்கள சந்திப்பாரு... என சொல்லி அனுப்பிவிட்டாராம் அண்ணியார். அண்ணியார்   சொன்னமாதிரியே  தளபதியும்  தினாவை  சந்தித்து இருக்கிறார்.

நாடாளுமன்ற தேர்தலுக்கு நேரம் நெருங்கிட்டு இருக்கு. கூட்டணி தொடர்பாக எல்லோரும் பேச ஆரம்பிச்சுட்டாங்க. நீங்க எங்களோடு இருக்க வேண்டும் என்பது என் விருப்பம். 'கேப்டனை நானே பார்த்து பேசணும் என்பதால்தான் வரேன்னு சொன்னேன். சின்னம்மாவும் கேப்டன் நம்மோடு இருக்கணும் என்றுதான் நினைக்கிறாங்க. கூட்டணி பற்றி யார் யாரோ பேசிட்டு இருக்காங்க. ஆனால் நான் விரும்பும் கூட்டணி உங்களோடு தான். அது சம்பந்தமாக நான் கேப்டனுடனும் உங்க அக்காவுடனும் பேசணும்' என்று சொல்லி இருக்கிறார் தினா

அதற்கு தளபதியும், ' நீங்க இப்படி வெளிப்படையாக பேசியதுல எனக்கு மகிழ்ச்சி. நான் கேப்டன்கிட்ட பேசிட்டு உங்களை சந்திக்க ஏற்பாடு செய்யுறேன். அதிமுகவுக்கு சரியான தலைமை நீங்கதான். நீங்க போகும் இடத்தில் எல்லாம் மக்கள் கூடுவதை நாங்களும் பார்த்துட்டுதான் இருக்கோம்...அம்மாவுக்கு பிறகு மக்களின் செல்வாக்கு உங்களுக்கு தான் இருக்கு..' என்று புகழ்ந்து இருக்கிறார் தளபதி.

தினாவை சந்தித்த தகவலையும், அவர் சந்திக்க விரும்பும் தகவலையும்  கேப்டனிடம் சொல்லி இருக்கிறார்  தளபதி. 'அவரு எதுக்கு என்னை பார்க்கணும்?' என கேட்டிருக்கிறார்  கேப்டன். அதற்கு  தளபதி, தன்னிடம்  தினா சொன்னதை எல்லாம் சொன்னாராம்.

அதைக் கேட்டு சிரித்த கேப்டன், ' அந்தம்மா கூட கூட்டணி வெச்சதுலதான் நம்ம கட்சியே கலகத்துப் போச்சு. இப்போ  தினாவோடு போனால் மிச்சம் இருக்கிறதும் போய்டும். அவரு விருப்பத்தில் நம்மை கூப்பிடுறாரா? இல்லை நம்மை இத்துடன் முடிக்கனும்னு கூப்பிடுறாரா? இப்போ இருக்கிற சூழ்நிலையில் அவரோடு போனால் ஊரே நம்மை திட்டி தீர்க்கும்.போன எலெக்‌ஷன் சமயத்தில் உண்டாக்கிய குழப்பத்தை போல இப்பவும் பண்ணிடாதீங்க.என்ன செய்யணும்னு நான் சொல்றேன். அமைதியா போங்க. யாரையும் சந்திக்க விரும்பல...' என்று சொல்லிவிட்டாராம். இந்த உரையாடல் நிகழ்ந்த போது யாரும் இருந்தாராம்.

click me!