
தமிழக சட்டப் பேரவையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் படம் இன்று திறப்பப்படும் நிலையில் அதற்கு திமுக, காங்கிரஸ், தேமுதிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையில் காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரிணி முதரவு தெரிவித்துள்ளார்.
சட்டப் பேரவையில் ஜெயலலிதாவின் படத்தி இன்று சபாநாயகர் தனபால் திறந்து வைக்கிறார். இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ள திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், ஒரு குற்றவாளியின் உருவப் படத்தை சட்டப் பேரவைக்குள் திறப்பது சட்ட விரோதம் என்றும் இந்தநிகழ்ச்சியில் திமுக கலந்து கொள்ளாது என்றும் அறிவித்திருந்தார்.
இதே போவ் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரும் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ள நிலையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளக் கூடாது என அறிவித்தார்.
இந்நிலையில் சட்டசபையில் முதன் முறையாக ஒரு பெண் படத்தை திறப்பதை வரவேற்கிறேன் என காங்கிரஸ் எம்எலஏ விஜயதாரிணி தெரிவித்துள்ளார்.
ஜெ., படம் திறப்பிற்கு தமிழக காங்கிரஸ் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அக்கட்சியைச் சேர்ந்த விஜயதாரணி வரவேற்பு தெரிவித்துள்ளது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.