தளபதியே சொல்லிட்டாரு... சும்மா விட்டு வைக்க முடியுமா..? அதிமுகவை பதற வைக்கும் விஜய் ரசிகர்கள்..!

Published : Sep 20, 2019, 03:04 PM IST
தளபதியே சொல்லிட்டாரு... சும்மா விட்டு வைக்க முடியுமா..? அதிமுகவை பதற வைக்கும் விஜய் ரசிகர்கள்..!

சுருக்கம்

பிகில் படத்தில் நடிகர் விஜயின் கருத்தை உள்வாங்கிய ரசிகர்கள் #JusticeForSubaShree என்ற ஹேஸ்டேக்கை உருவாக்கி இந்தியளவில் ட்ரெண்டாக்கி வருகின்றனர். 

பிகில் படத்தில் நடிகர் விஜயின் கருத்தை உள்வாங்கிய ரசிகர்கள் #JusticeForSubaShree என்ற ஹேஸ்டேக்கை உருவாக்கி இந்தியளவில் ட்ரெண்டாக்கி வருகின்றனர். 

பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று  தாம்பரம் பகுதியிலுள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரியில் பிரமாண்டமாக  நடைபெற்றது. அப்போது பேசிய நடிகர் விஜய் சமீபத்தில் உயிரிழப்பை ஏற்படுத்திய பேனர் விவகாரத்தில் ஆளும் அரசை கடுமையாக சாடினார். அதில் சுபஸ்ரீ விஷயத்தில யாரை கைது செய்யணுமோ அவங்கள கைது செய்யாமல் பிரிண்டிங் பிரஸ் வைத்தவரை கைது பண்ணியிருக்காங்க என்று அதிமுகவை நேரடியாக சாடினார்.

பின்னர் ரசிகர்களை ஊக்கபடுத்தும் விதமாக பேசிய விஜய் பேனரால் இறந்த சுபஸ்ரீ போன்ற சமூக பிரச்சனைக்கு ஹேஸ்டேக் போடுங்க, சமூக பிரச்சனைல கவனம் செலுத்துங்க என்று தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். நடிகர் விஜய் சொல்லி விட்டார் என்று உள்வாங்கிய ரசிகர்கள் அடுத்த நொடியே   #JusticeForSubaShree என்ற ஹாஸ்டக்கை தங்களது கருத்துக்களை  பதிவு செய்து வருகின்றனர். இதனால்  #JusticeForSubaShree என்ற ஹேஸ்டேக் ட்விட்டரில் இந்தியளவில் ட்ரெண்டாகி வருகிறது. 

 

அதிமுக முன்னாள் கவுன்சிலர் வீட்டு கல்யாணத்தில் அந்த பேனர் வைக்கப்பட்டுள்ளதால் இந்த ஹேஸ்டேக் அதிமுகவினரை பதற வைத்துள்ளது. 

PREV
click me!

Recommended Stories

நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு அப்பாற்பட்டதா திமுக அரசு? விளாசும் இபிஎஸ்
100 பேர் கூட இல்லாத டாக்டர் ராமதாஸ் டெல்லி போராட்டம்..! ஒங்கும் அன்புமணி கை