பொன்னாருக்கு எதிராக விஜய் ரசிகர்கள்.. கன்னியாகுமரியில் காங்கிரஸுக்கு ஆதரவு!

Published : Apr 14, 2019, 09:19 PM IST
பொன்னாருக்கு எதிராக விஜய் ரசிகர்கள்.. கன்னியாகுமரியில் காங்கிரஸுக்கு ஆதரவு!

சுருக்கம்

மதுரையில் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு. வெங்கடேசனுக்கு விஜர் மக்கள் மன்றத்தினர் ஆதரவு தெரிவித்தனர். இதேபோல தமிழகத்தின் ஒவ்வொரு தொகுதியிலும் ஒவ்வொருவிதமான வேட்பாளர்களை விஜய் மக்கள் மன்றத்தினர் ஆதரிப்பதாகக் கூறப்படுகிறது.   

கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமாருக்கு நடிகர் விஜய் மக்கள் மன்றத்தைச் சேர்ந்தவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
 நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது பற்றி வெளிப்படையாக நடிகர் விஜய எதையும் தெரிவிக்கவில்லை. ஆனால், அவருடை தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர், மோடி மீண்டும் ஆட்சிக்கு வருவதை மக்கள் விரும்பவில்லை எனத் தெரிவித்திருந்தார்.

 
இந்நிலையில் நடிகர் விஜய் ரசிகர்கள் ஒவ்வொரு தொகுதியில் ஒவ்வொரு விதமான முடிவுகளை எடுத்து அரசியல் கட்சிகளை ஆதரிக்கின்றனர். மதுரையில் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு. வெங்கடேசனுக்கு விஜர் மக்கள் மன்றத்தினர் ஆதரவு தெரிவித்தனர். இதேபோல தமிழகத்தின் ஒவ்வொரு தொகுதியிலும் ஒவ்வொருவிதமான வேட்பாளர்களை விஜய் மக்கள் மன்றத்தினர் ஆதரிப்பதாகக் கூறப்படுகிறது. 
இதற்கிடையே கன்னியாகுமரி நாடாளுமன்ற வேட்பாளர் எச்.வசந்தகுமாருக்கு விஜய் மக்கள் மன்றத்தினர் நேரில் ஆதரவு தெரிவித்துள்ளனர். எச்.வசந்தகுமாரை அவர்கள் நேரில் சந்தித்து தங்கள் ஆதரவை தெரிவித்ததுடன், பிரசாரத்திலும் ஈடுபட்டார்கள். அப்போது, ராகுல் காந்தி தலைமையில் மத்தியில் நல்லாட்சி அமைய வேண்டும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

PREV
click me!

Recommended Stories

BJP Plan: அண்ணாமலைக்கு ‘ரெஸ்ட்’ அல்ல... இது ஒரு பெரிய ‘புரமோஷன்’ - டெல்லி மேலிடத்தின் ரகசியத் திட்டம்!
விஜய் போட்டியிடும் தொகுதியில் முதல்வர் மார்னிங் வாக்; திமுக பயப்படவில்லை என நாடகமாடுகிறது - ஆதவ் அர்ஜுனா தாக்கு!