வெற்றியோ தோல்வியே திமுகதான் கதி.. எங்களுக்கு இதையாவது செய்யுங்க.. ஸ்டாலினை நெருக்கும் காதர் மொய்தீன்.

By Ezhilarasan BabuFirst Published Jun 29, 2021, 9:35 AM IST
Highlights

நீண்ட நாட்களாக தமிழக சிறையில் உள்ளவர்களை விடுவிக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வலியுறுத்தியதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன் தெரிவித்தார்.

நீண்ட நாட்களாக தமிழக சிறையில் உள்ளவர்களை விடுவிக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வலியுறுத்தியதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன் தெரிவித்தார்.சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலினை சந்தித்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தேர்தலுக்கு பிறகு தமிழக முதல்வராக ஸ்டாலின் பதவியேற்றதும் சந்தித்து வாழ்த்து கூறினேன். பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய மக்களின் ஆட்சி என்று அனைத்து தரப்பு மக்களும், திமுக வை விமர்சனம் செய்தவர்களும் இது ஒரு முன்மாதிரியான ஆட்சி என்றும், தமிழக மக்கள் கொடுத்து வைத்தவர்கள் என்று கூறும் அளவுக்கு ஆட்சி நடைபெறுகிறது. 

அதற்க்கு ஒரு உதாரணம் கொரோன தொற்றில் இருந்து மக்களை காக்க போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு தற்போது கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தற்போது குறைந்துள்ளது, வரும் காலத்தில் அதி அற்புதமான வரலாறாக அவர் ஆட்சி அமைய வேண்டும். மேலும் சில கோரிக்கைகளை அவரிடம் வைத்துள்ளோம், பள்ளிக்கூடம் நடத்துவதில் முந்தைய அரசு சுயநிதி பள்ளிக்கூடம் என்று மாற்றி அங்கு ஆசிரியர்களுக்கு சம்பளத்தை அரசு தராமல் இருந்தது, சுயநிதி பள்ளிகள் என்பதை மாற்றி அரசு பள்ளிகளை ஏற்று நடத்தி ஆசிரியர்களுக்கு சம்பளத்தை அரசு வழங்க வேண்டும். பள்ளிவாசல் கட்ட மாவட்ட ஆட்சியர் அனுமதியளிக்க வேண்டும் என்ற நிலை உள்ளது. அந்த அனுமதியை பெறுவதில் பல சிக்கல்கள் ஏற்படுகிறது, எனவே அந்த சட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும்.

இஸ்லாமியர்கள் உட்பட தமிழகத்தில் பல ஆண்டுகளாக சிறையில் வாடி வருபவர்களை விடுதலை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளேன், உலமாக்கள் நிவாரண நிதியை வழங்க வேண்டும் தமிழக, இந்திய, உலக மக்களால் இதுபோன்ற ஆட்சி இதற்கு முன்பு இருந்து இல்லை என்ற வகையில் இந்த ஆட்சி அமைய வேண்டும். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் கொரோன நிவாரண நிதியாக 5 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது, நாங்கள் தேர்தல் வெற்றி தோல்விகளை தாண்டி திமுக கூட்டணியில் தொடர்ந்து இருந்து வருகிறோம். தமிழகத்தில் திமுக வுடன் எங்கள் உறவு பாரம்பரியமான ஒன்று தங்கள் கூட்டணி தொடர்ந்து நீடிக்கும் என்று கூறினார். 

 

click me!