சில்மிஷம் சிவசங்கர் பாபா மீது பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுக்கலாம். சிபிசிஐடி போலீஸ் கைப்பேசி எண் அறிவிப்பு.

By Ezhilarasan BabuFirst Published Jun 22, 2021, 9:03 AM IST
Highlights

புலன்விசாரணை அதிகாரி/காவல் துணை கண்காணிப்பாளர் திரு. குணவர்மன் கைபேசி எண். 98405 58992 மற்றும் காவல் ஆய்வாளர் திருமதி. ரேணுகாதேவி கைபேசி எண். 9840669982 மற்றும் மின்னஞ்சல் inspocu2@gmail.com-ல் புகார்கள் தெரிவிக்கலாம்.

பாதிக்கப்பட்ட சுசில் ஹரி இன்டர்நேஷ்னல் பள்ளி மாணவிகள் அளித்த புகாரின்மீது, ஸ்ரீ சிவசங்கர் பாபாவுக்கு எதிராக, மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், அவருடைய பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேற்படி மூன்று வழக்குகளும் தமிழக காவல்துறை இயக்குனர் அவர்களால் மேல் விசாரணைக்காக 13.06.2021 அன்று சிபிசிஐடி- க்கு மாற்றப்பட்டன. 

சிபிசிஐடி மேற்படி வழக்குகளை புலன் விசாரணைக்கு எடுத்து கொண்டது. வழக்கின் புலன்விசாரணையில் எதிரி சிவசங்கர் பாபா 16.06.2021 புதுடெல்லியில் கைது செய்யப்பட்டு, சென்னைக்கு அழைத்துவரப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதனை தொடர்ந்து சிவசங்கர் பாபாவிற்கு உதவியாக இருந்த எதிரி சுஷ்மிதா என்பவர் 18.06.2021 அன்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக, பாதிக்கப்பட்டவர்கள் புகார்கள் கொடுக்க வேண்டும் என்றால், 

புலன்விசாரணை அதிகாரி/காவல் துணை கண்காணிப்பாளர் திரு. குணவர்மன் கைபேசி எண். 98405 58992 மற்றும் காவல் ஆய்வாளர் திருமதி. ரேணுகாதேவி கைபேசி எண். 9840669982 மற்றும் மின்னஞ்சல் inspocu2@gmail.com-ல் புகார்கள் தெரிவிக்கலாம். மேலும் பாதிக்கப்பட்டவர்கள் 24 மணிநேரமும் இயங்கும் சிபிசிஐடி கட்டுப்பாட்டறை தொலைபேசி எண்கள். 28512500/ 28512510 புகார்கள் தெரிவிக்கலாம். புகார்தாரர் மற்றும் புகார்தாரர்களின் விவரங்கள் மிகவும் இரகசியமாக பாதுகாக்ககப்படும். என சிபிசிஐடி போலீஸ் தெரிவித்துள்ளது. 
 

click me!