துரோகம் செய்துவிட்டு மறைப்பதா? தினகரனிடம் கேள்வி கேட்கும் இளவரசியின் மகள்!

 
Published : Dec 20, 2017, 03:27 PM ISTUpdated : Sep 19, 2018, 01:42 AM IST
துரோகம் செய்துவிட்டு மறைப்பதா? தினகரனிடம் கேள்வி கேட்கும் இளவரசியின் மகள்!

சுருக்கம்

Vetrivel has betrayed him - Krishnapriya

ஜெ. வீடியோ வெளியிடப்பட்டது குறித்து டிடிவி தினகரனிடம் விளக்கம் கேட்பேன் என்றும் வெற்றிவேல் துரோகமிழைத்துள்ளார் என்றும் சசிகலாவின் உறவினர் கிருஷ்ணபிரியா கூறியுள்ளார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது எடுத்த வீடியோ என்று டிடிவி தினகரனின் ஆதரவாளர்
வெற்றிவேல் இன்று வெளியிட்டார். இது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீடியோ குறித்து பல்வேறு தரப்பினர் சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர். ஆர்.கே.நகர் தேர்தலை வைத்தே இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளதாகவும் குற்றம் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மருத்துவமனையில் இருக்கும் ஜெயலலிதா குறித்த வீடியோ வெளியிட்டது தவறு என்று சசிகலா குடும்பத்தை சேர்ந்தவர்கள் கூறி வருகின்றனர். இது தொடர்பாக சசிகலாவின் உறவினர், கிருஷ்ணபிரியா தனது டுவிட்டர் பக்கத்தில் டிடிவி தினகரன் உடனிருக்கும் வெற்றிவேலின் கீழ்த்தரமான செயல் என்று கூறியிருந்தார்.

இதனை தொடர்ந்து கிருஷ்ணப்ரியா சென்னை, தி.நகரில், செய்தியாளர்களைச் சந்தித்தார். தற்போது வெளியாகி வீடியோ, முதடிலல் கொடுக்க சொன்னதே நாங்கள்தான் என்றார். நாங்கள் கூறும்போது அதனை வெளியிடாமல், இப்போது அதனை வெளியிடுவது கீழ்த்தரமான செயல் என்றார். 

டிடிவி தினகரனிடம் கொடுக்கப்பட்ட அந்த வீடியோ வெற்றிவேலிடம் ஏன் போக வேண்டும்? இது பெரிய கேள்வியாக உள்ளது. அதற்கான பதில் இனிமேல்தான் வெளியாகும் என்றார். வெற்றிவேல் துரோகம் இழைத்திருக்கிறார். உண்மையான அம்மாவின் தொண்டனாக இருப்பவர். தற்போது இதனை ஏன் அவர் வெளியிட வேண்டும் என்றார். சசிகலாவின் அனுமதி இல்லாமலே இது நடந்துள்ளது. வீடியோவை வெளியிட சசிகலாவுக்கு
மட்டுமே அனுமதி உண்டு. ஏற்கனவே இதனை அவர் வெளியிட்டிருக்கிறலாமே.

இதற்கு முன்பு சசிகலா குறித்து கொலைகாரி உள்ளிட்ட பல்வேறு வார்த்தைகள் சொல்லப்பட்டன. இதனை அப்போதே நாங்கள் வெளியிட்டிருக்கலாம். ஆனால் அதனை நாங்கள் அப்போது வெளியிடவில்லை. அப்போது சசிகலா, கொலைகாரி என்றுதானே சொல்வார்கள் சொல்லட்டும் என்றே கூறினார். இந்த வீடியோ வெளியானதால் தற்போது சசிகலாவின் மனநிலை எப்படி இருக்கும் என்பது தெரியவில்லை. 

அம்மாவை அசிங்கப்படுத்தினது மட்டுமல்லாமல் சசிகலாவையும், அவரின் வார்த்தைகளையும் வெற்றிவேல் அசிங்கப்படுத்தி உள்ளார். இந்த வீடியோவை எடுத்தது சிசிகலாதான். இதனை எடுக்க சொன்னது ஜெயலலிதாதான். 

விசாரணை கமிஷனுக்கு தேவைப்பட்டால் அளிப்பதற்காகவே இதனை தினகரனிடம் கொடுத்தோம். ஆனால், இந்த விடியோவை இன்று வெற்றிவேல் வெளியிட்டுள்ளார். வீடியோவை வெளியிட்டது குறித்து தினகரனிடம் விளக்கம் கேட்பேன் என்று கிருஷ்ணப்பிரியா கூறினார்.

PREV
click me!

Recommended Stories

விஜய்யும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்.. மதுரையில் திருமா பரபரப்பு பேச்சு
ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!