மைதானத்திற்குள் பாம்புகளை விட திட்டம்...! ஏற்பாடு செய்யும் வேல்முருகன்..!?

Asianet News Tamil  
Published : Apr 10, 2018, 02:05 PM ISTUpdated : Sep 19, 2018, 02:14 AM IST
மைதானத்திற்குள் பாம்புகளை விட திட்டம்...! ஏற்பாடு செய்யும் வேல்முருகன்..!?

சுருக்கம்

VELMURUGAN PLANNED TO SPREAD SNAKES IN CHEPPAKKAM STADIUM

மைதானத்திற்குள் பாம்புகளை விட திட்டம்...! ஏற்பாடு செய்யும் வேல்முருகன்..!

பெருத்த எதிர்பார்ப்பும்,பெருத்த எதிர்ப்பையும் பெற்றுள்ள  இன்றைய  ஐபிஎல்  போட்டிகள் நடப்பதில்  ஒவ்வொரு நினிடமும்  திக் திக் என  செல்கிறது என்றே கூறலாம்.

தமிழகம் முழுவதும் ஆளும் கட்சி முதல் எதிர் கட்சி வரை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் எனவும், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என வலியுறுத்தியும் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதற்கிடேயே தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் வேல்முருகன், சென்னை சேப்பாக்கத்தில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற கூடாது என கூறி கடும் எதிர்ப்பை  கிளப்பி  உள்ளார்

அதனையும் மீறி  நடைபெறும் என்றால்,பூட்டு போடும் போராட்டம் செய்வோம் என  தெரிவித்து இருந்தார்.இந்நிலையில் மைதானத்தில் விஷ பாம்புகள் விடப்படலாம்  என  வேல்முருகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்

இதெல்லாம்  ஒரு பக்கம் இருக்க கிரிக்கெட் போட்டி நடந்தே  தீரும் என, ஐந்தடுக்கு பாதுக்கப்பு வழங்கப்பட்டு உள்ளது சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்திற்கு...

மேலும், இவ்வாறு  செய்வதால், மத்திய அரசுக்கு  அழுத்தம் கொடுக்கப்படும் என  நினைகின்றனர்.

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், மைதானத்தில் விஷப்பாம்புகள் விடப்படும் என தெரிவித்த பின்னர்,மலைவாழ் மக்கள் நூற்றுக் கணக்கான  நல்ல  பாம்புகளை விடப் போவதாக வாட்ஸ் ஆப் மூலம் தகவல் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

மேலும்,கிரிக்கெட் வீரர்கள் வெளியே வரும் போது அவர்களுக்கு ஏதாவது நேர்ந்தால் தாங்கள் பொறுப்பல்ல என்றும் தெரிவித்து இருந்தார் வேல்முருகன். இருந்தாலும், இளைஞர்கள் பொதுவாகவே கிரிக்கெட்  விரும்பிகள் மற்றும்  வீர்ர்களுக்கு பெரும் ரசிகர்கள் என்பதால் அவர்கள் வெளியில் வந்தாலும் எந்த பாதிப்பும் ஏற்படாது  என்றே கூறுகின்றனர் பெரும்பாலானோர்.

அதையும் மீறி  ஏதாவது பிரச்சனை  நடந்தால் அதற்கு பின்னணியில் வேல்முருகன்  இருக்க வாய்ப்பு உள்ளது என்று  பலரும்  விமர்சனம் செய்து வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

விஜய் மட்டுமே முழு காரணம்.. கரூரை மீண்டும் கையிலெடுத்த திமுக.. கடுமையான விமர்சனம்!
திமுக ஆட்சியில் தலைதூக்கிய துப்பாக்கி கலாசாரம்.. போட்டுத் தாக்கிய அதிமுக!