வேல்முருகனை கொம்பு சீவி விடும் மு.க.ஸ்டாலின்... பாமகவை பங்கம் செய்ய அதிரடி திட்டம்..!

By vinoth kumarFirst Published Nov 21, 2019, 3:46 PM IST
Highlights

உள்ளாட்சி தேர்தலில் நேடியாக நின்றால் தோற்றுவிடுவோம் என்பதால் மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடத்தப்படும் என அதிமுக அரசு அறிவித்துள்ளது கண்டத்துக்குரியது. இது ஆளுங்கட்சியின் தோல்வி பயத்தைக் காட்டுகிறது. 

மக்களவை தேர்தல் போன்று உள்ளாட்சி தேர்தலிலும் பாமகவுக்கு எதிராக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனை மீண்டும் களமிறக்க மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளார். 

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் சந்தித்தார். இவர்கள் இருவரும் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினர். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், இடைத்தேர்தலுக்குப் பிறகு மு.க.ஸ்டாலினை சந்திக்க நினைத்தேன். அதற்காக இப்போது அவரைச் சந்தித்தேன்.

உள்ளாட்சி தேர்தலில் நேடியாக நின்றால் தோற்றுவிடுவோம் என்பதால் மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடத்தப்படும் என அதிமுக அரசு அறிவித்துள்ளது கண்டத்துக்குரியது. இது ஆளுங்கட்சியின் தோல்வி பயத்தைக் காட்டுகிறது. 

இலங்கையில் ஒன்றரை லட்சம் தமிழ் மக்களைக் கொன்று குவித்த மகிந்த ராஜபக்ச பிரதமராகவும், கோத்தபய ராஜபக்ச அதிபராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது, அங்குள்ள தமிழர்களின் உயிருக்கும் உடைமைக்கும் பேராபத்தை ஏற்படுத்தும். ஐ.நா.வால் போர்க்குற்றவாளி விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட கோத்தபய ராஜபக்சவை இந்தியாவுக்கு அழைப்பதும், இந்தியப் பிரதமர் அவருக்கு சிவப்புக் கம்பளம் விரிப்பது வேதனை அளிக்கிறது. திருமாவளவனை காயத்ரி ரகுராம் போன்றவர்கள் நாகரிகமற்ற முறையில் விமர்சிப்பது கண்டனத்துக்குரியது. 

முரசொலி விவகாரத்தை வைத்து ராமதாஸ் கேவலமாக அரசியல் செய்து வருகிறார். முரசொலி நில விவகாரத்தில், புகார் அளித்தோர் தரப்பு எந்த ஆவணத்தையும் தாக்கல் செய்யவில்லை. உண்மைக்குப் புறம்பான கருத்துகளைக் கூறி, தமிழக வாழ்வாதாரப் பிரச்சினைகளை மழுங்கடிக்கும் இதுவாகும். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பையனூர் பங்களா யாருடையது என்பதை நாடறியும். அது பஞ்சமி நிலம்தான் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

மேலும், மக்களவை தேர்தல் போன்று உள்ளாட்சி தேர்தலிலும் பாமகவுக்கு எதிராக வேல்முருகனை மீண்டும் களமிறக்க மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளார். உள்ளாட்சி தேர்தலில் எங்கெல்லாம் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று வேல்முருகன் - ஸ்டாலின் இருவரும் ஆலோசனை செய்ததாகவும் கூறப்படுகிறது. 

click me!