மீண்டும் ஏ.சி.சண்முகத்திற்கு சீட்...? உறுதி செய்த வைகைச்செல்வன்..!

Published : Jul 05, 2019, 11:00 AM IST
மீண்டும் ஏ.சி.சண்முகத்திற்கு சீட்...? உறுதி செய்த வைகைச்செல்வன்..!

சுருக்கம்

வேலூரில் ஆகஸ்ட் 5-ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஏ.சி.சண்முகத்திற்கு மீண்டும் சீட் வழங்கப்படும் என வைகைச்செல்வன் தகவல் தெரிவித்துள்ளார். 

வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் தொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வைகைச்செல்வன் பேட்டியளித்தார். அதில் வேலூரில் ஏற்கனவே நடைபெற இருந்த தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த தொகுதிக்கு தேர்தலை நடத்துவதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது மகிழ்ச்சியான செய்தி. இந்த தேர்தலில் சந்திக்க முழு பலத்துடன் அதிமுக தாயாராக உள்ளது. 

ஏற்கனவே அந்த தொகுதியில் கூட்டணி கட்சியில் வேட்பாளராக ஏ.சி.சண்முகம் நிறுத்தப்பட்டிருந்தார். தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டிருப்பதால் இதுகுறித்த அறிவுப்பு தலைமை கழகத்தில் இருந்து வெளிவரும். இந்த தேர்தலில் அதிமுக மிகப்பெரிய வெற்றியை பெறும் என நம்பிக்கை தெரிவித்தார். 

 சட்டமன்ற இடைத்தேர்தலில் ஆளும் அதிமுகவுக்கு 9 தொகுதிகளில் வெற்றியை பொதுமக்கள் வழங்கியுள்ளனர். நாடாளுமன்றத் தேர்தலில் நாங்கள் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. ஆனால் வேலூர் மக்களவை தொகுதியில் அதிமுக மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்றார்.

PREV
click me!

Recommended Stories

Tamil Nadu CM Vijay Assembly Speech: தமிழ்நாட்டிற்காக எந்த அவமானத்தையும் தாங்கிக்கொள்வேன்.! சட்டசபையில் அடித்து பேசிய முதல்வர் விஜய்.!
kalaignar karunanidhi: கலைஞரின் வார்த்தை விளையாட்டு.! சொற்களை வீசி சிரிக்க வைத்த வசீகரன்.! பாமர மக்களையும் ரசிக்க வைத்த அல்டிமேட் அரசியல் பேச்சு.!