என்.ராமுக்கு அம்பேத்கர் சுடர் விருது ! வீரமணி எதிர்ப்பாரா ?

By Selvanayagam PFirst Published Aug 8, 2019, 10:19 AM IST
Highlights

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் அம்பேத்கர் சுடர் விருது இந்து என்.ராமுக்கு வழங்கப்படுவதற்கு திராவிடர் கழகத் தலைவர் எதிர்ப்பு தெரிவிப்பாரா என கேள்வி எழுந்துள்ளது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில்  ஒவ்வொரு ஆண்டும், அம்பேத்கர் சுடர், பெரியார் ஒளி, காமராஜர் கதிர், அயோத்திதாசர் ஆதவன், காயிதே மில்லத் பிறை, செம்மொழி ஞாயிறு ஆகிய ஆறு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. சமூகநீதிக்கும், தமிழ் மொழி மேம்பாட்டுக்கும் பாடுபடும் சான்றோரைச் சிறப்பிக்கும் வகையில் இந்த விருதுகளை வழங்கி வருவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தெரிவித்துள்ளது. இந்நிலையில் 2019-ஆம் ஆண்டு விருதுகள்  இன்று சென்னை காமராஜர் அரங்கில் நடைபெறும் விழாவில் வழங்கப்பட உள்ளது.

இதுவரை மறைந்த திமுக தலைவர் கருணாநிதி, புதுச்சேரி முதலமைச்சர்  வெ.நாராயணசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா.நல்லகண்ணு, கேரள முதல்வர் பினராயி விஜயன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி உள்ளிட்ட பலருக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

 

அதுபோல, 2019-ஆம் ஆண்டுக்கான விருதுகள் வழங்கும் விழா சென்னை காமராஜர் அரங்கில் இன்று நடைபெறுகிறது. 

இதில், அம்பேத்கர் சுடர் விருது தி இந்து ஊடகக் குழுமத்தின் தலைவர் என்.ராமுக்கு வழங்கப்பட உள்ளது. பெரியார் ஒளி விருது வேலூர் விஐடி வேந்தர் கோ.விசுவநாதனுக்கும், காமராஜர் கதிர் விருது  காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் திரு.பீட்டர் அல்போன்ஸுக்கும், காயிதே மில்லத் பிறை விருது வரலாற்று அறிஞர் செ.திவானுக்கும், அயோத்திதாசர் ஆதவன் விருது நாகப்பனுக்கும், செம்மொழி ஞாயிறு விருது தொழிலதிபர் நல்லி குப்புசாமிக்கும் வழங்கப்பட உள்ளது.

இந்நிலையில் தான் அம்பேத்கர் சுடர் விருது என்.ராமுக்கு வழங்கப்படுவதற்கு ஒரு சில அமைப்புகள் எதிர்ப்பித் தெரிவித்துள்ளன.
இதே போல் திராவிட கழக தலைவர் கி.வீரமணி இதற்கு தெரிவிப்பாரா  ? என கேள்வி எழுந்துள்ளது.

click me!