வன்னிய இளைஞர்கள் பாஜகவில் சேருவதை தடுக்க வேண்டும்.. பாட்டாளிகளுக்கு உத்தரவு போட்டாரா ராமதாஸ்.??

By Ezhilarasan BabuFirst Published Jun 2, 2022, 4:23 PM IST
Highlights

வட மாவட்டம் மற்றும் மேற்கு மாவட்ட இளைஞர்கள் பாஜகவில் இணைவதை தடுக்க வேண்டும் என பாமக நிர்வாகிகளுக்கு அக்கட்சியின் நிறுவனத் தலைவர் ராமதாஸ் கட்டளையிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

வட மாவட்டம் மற்றும் மேற்கு மாவட்ட இளைஞர்கள் பாஜகவில் இணைவதை தடுக்க வேண்டும் என பாமக நிர்வாகிகளுக்கு அக்கட்சியின் நிறுவனத் தலைவர் ராமதாஸ் கட்டளையிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து பிரபல நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. செல்வி ஜெயலலிதா கலைஞர் கருணாநிதி இருந்தவரை திமுக அதிமுக என மாறி மாறி கூட்டணி வைத்து வந்த பாமக தற்போது பாஜக அதிமுக கூட்டணியில் இருந்து வருகிறது. ஆனால் கடந்த ஊரக உள்ளாட்சி மன்ற தேர்தலில் தனித்தே போட்டியிட்டது பாமக, அதுமுதல் தற்போது வரை தனது கூட்டணி நிலைப்பாடு குறித்து பாமக  வெளிப்படையாக எதுவும் கூறாமல் இருந்து வருகிறது. இந்நிலையில் கட்சியின் புதிய தலைவராக அன்புமணி ராமதாசை அக்காட்சி ஒருமனதாக நியமித்துள்ளது. 

இந்நிலையில் எதிர்வரும் 2024  நாடாளுமன்ற தேர்தலில் கணிசமான எண்ணிக்கையில் எம்பி இடங்களைக் கைப்பற்ற வேண்டும் என அக்கட்சி வியூகம் வகுத்து வருகிறது. அதேபோல் 2.0 என்ற திட்டத்தை வகுத்து எதிர்வரும் 2016 சட்டமன்ற தேர்தலில் அன்புமணி ராமதாசை முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கி ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் பாமக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் உடன் மாவட்ட வாரியாக பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார், இது ஒருபுறம் இருந்தாலும், வட மாவட்டங்களில் தங்களுக்குள்ள வாக்கு வங்கிகளை வேறு எந்த கட்சியினரும் பிரித்து விடக்கூடாது என்பதில் பாமக ஆரம்பம் முதலிருந்தே கவனம் செலுத்தி வருகிறது. 

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கட்சி ஆரம்பித்தபோது அப்போது அக்கட்சியை மிகக் கடுமையாக எதிர்த்தார் ராமதாஸ், வட மாவட்டத்தில் வன்னிய இளைஞர்கள் அதிக அளவில் தேமுதிகவில் இணைந்ததே அதற்கு காரணமாக இருந்தது. அதேபோல் தற்போது நாம் தமிழர் மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் பாமகவுக்கு வட மாவட்டத்தில் சவாலாக இருந்து வருகின்றன, பெரும்பாலான வன்னிய இளைஞர்களை கவரும் சக்திகளாக பஜகவும், நாம் தமிழர் கட்சியும் பாமகவுக்கு டாப் கொடுத்து வருகின்றன. இந்நிலையில் நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் ராமதாஸ்:-  பாமகவை பொருத்தவரையில் களத்தில் பாஜக தான் எதிரி, வன்னியர் சங்கத்தில் இருந்தோ பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்தோ எவரும் வேறு கட்சிக்கு சென்றால் அவர்கள் மீண்டும் பாமகவுக்கு வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.

ஆனால் பாஜகவுக்கு சென்றால் அவர்கள் திரும்பவும் வரமாட்டார்கள். வன்னியர் சங்கங்களும் பாமகவும் உள்ள கிராமங்களில் இளைஞர்கள் ஆர்எஸ்எஸ் பாஜகவில் இணைவதை நிர்வாகிகள் தடுக்கவேண்டும். பாமகவினர் தீவிர களப்பணி ஆற்ற வேண்டும், இளைஞர்களை கவரும் வகையிலான திட்டங்களை நாம் முன்வைக்க வேண்டும் என ராமதாஸ் அவர்களிடம் அறிவு கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் இல்லை. எனவேதான் கடந்த இரு நாட்களுக்கு முன்னர் ஆளுநரை சந்தித்த பாமக தலைவர் அன்புமணி பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்னும் காவல்துறை அதிகாரி என்ற மனநிலையிலேயே இருக்கிறார், அண்ணாமலை முதலில் போலீஸ் தொப்பியை கழற்றி வைக்க வேண்டும் என காட்டமாக விமர்சித்த வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

click me!