காசு கொடுத்தால் மட்டுமே கட்சியில் மதிப்பு... கடுப்பாகும் திமுக உடன்பிறப்புகள்..!

By Thiraviaraj RMFirst Published Jan 16, 2021, 10:43 AM IST
Highlights

காசு கொடுத்தால் மட்டுமே கட்சியில் மதிப்பு, மரியாதை கொடுப்பதாக, கோவையில் திமுக தலைமைக்கு எதிராக அக்கட்சியின் தொண்டர்களே கொந்தளித்து இருப்பது மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட மூத்த தலைவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

காசு கொடுத்தால் மட்டுமே கட்சியில் மதிப்பு, மரியாதை கொடுப்பதாக, கோவையில் திமுக தலைமைக்கு எதிராக அக்கட்சியின் தொண்டர்களே கொந்தளித்து இருப்பது மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட மூத்த தலைவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் தி.மு.க சார்பில் புதிய வட்டபொறுப்பாளர்களை, மாவட்ட பொறுபபாளர் சேனாதிபதி பணத்தை பெற்றுக் கொண்டு நியமிக்கப்பட்டதைக் கண்டித்து கோவை மாவட்ட பிரதிநிதி இஷார் அகமது தலைமையில் திமுக அதிருப்தி பொறுப்பாளர்களும், தொண்டர்களும் ரகசிய ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினர்.

கூட்டத்தில் திமுகவில் நிகழும் அலட்சியங்கள் மற்றும் துரோகங்களை அவர்களுக்குள் பரிமாறிக் கொண்டனர். அப்போது, மாவட்ட பொறுப்பாளர் சேனாதிபதி 4 மாதத்தில் 16 முறை குழப்பத்தை ஏற்படுத்திவிட்டதாகவும், மேலும், பணத்தை பெற்றுக்கொண்டு பதவிகளை வழங்குவதாகவும் குற்றச்சாட்டினர். 
 
திமுகவில் உண்மையாக உழைப்பவர்களுக்கு மரியாதையும், பதவிகளும் இல்லை என்றும், வேஷம் போடுபவர்களுக்கும், பல்வேறு குற்றச்செயல் புரிபவர்களுக்குமே பதவி வழங்குவதாக அவர்கள் வேதனை தெரிவித்தனர். இந்தக் கூட்டத்தில் திமுகவை கண்டித்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் பகுதி செயலாளர் கார்த்திகேயன், உட்பட வட்டக்கழக செயலாளர்களும், குறிச்சி பகுதியில் உள்ள திமுகவின் மூத்த முன்னோடிகளான, பிலிப் மற்றும் காஜாகான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் இவர்கள் அனைவரும் விரைவில் அ.தி.மு.க.,வில் இணையப் போவதாகவும் தெரிவித்துள்ளார்கள்.
 
சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும்வேளையில், திமுகவினரின் இந்த அதிருப்தி கூட்டம், கட்சியின் மூத்த தலைவர்களான மு.க.ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்டோருக்கு கடும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது

click me!