அரசு அரங்கத்தைப் பிடிக்க முடிந்த ஸ்டாலினால், அரசை பிடிக்க முடியாதா? முரசொலி பவள விழாவில் வைரமுத்து அதிரடி பேச்சு !!!

Asianet News Tamil  
Published : Aug 10, 2017, 09:21 PM ISTUpdated : Sep 19, 2018, 01:00 AM IST
அரசு அரங்கத்தைப் பிடிக்க முடிந்த ஸ்டாலினால், அரசை பிடிக்க முடியாதா? முரசொலி பவள விழாவில் வைரமுத்து அதிரடி பேச்சு !!!

சுருக்கம்

vairamuth speech about staline in kalaivanar arangam

முரசொலி பவள விழாவை நடத்துவதற்காக கலைவாணர் அரங்கத்தைப் பிடிக்க முடிந்த ஸ்டாலினால், இந்த அரசை பிடிக்க முடியாதா என்ன? என கவிஞர் வைரமுத்து பேசினார்.

சென்னையில் முரசொலி பவளவிழா  கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த், கமலஹாசன், பிரபு, உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்றனர்.

இதில் முன்னணி பத்திரிகை நிறுவனங்களின் ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், அரசியல் தலைவர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். 

விழாவில் பங்பேற்றுப் பேசிய, கவிஞர் வைரத்து , 18 வயதில் முரசொலி பத்திரிகையை நடத்த கருணாநிதி பொறுப்பு எடுத்துக்கொண்டார்.  அது காதலியை தேடும் வயது என்றும், திருமண பத்திரிகை அடிக்கும் வயதில், கொள்கைக்காக பத்திரிகையை நிறுவியவர் கருணாநிதி என்றும் பாராட்டிப் பேசினார்.  

பணம், செல்வாக்கு என்ற எந்த ஒரு பின்புலமும் இல்லாமல், ஒரு பத்திரிகையை நிறுவி அதை 75 வருட காலம் நீடித்து வளர செய்வது என்பது கருணாநிதி  ஒருவரால் மட்டுமே முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

பொதுவாக ஆளும் கட்சியாக இருந்தால் மட்டுமே, அரசு அரங்கங்களில் விழா நடத்த முடியும், ஆனால் எதிர்கட்சியாக இருந்து கொண்டு முரசொலி பவள விழாவிற்காக அரசாங்க அரங்கத்தை எப்படி பிடித்தீர்கள் என ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பிய வைரமுத்து, அரசு அரங்கைப் பிடித்த உங்களால் அரசை பிடிக்க முடியாதா? என தெரிவித்தார்

PREV
click me!

Recommended Stories

விஜய்யை திணறடித்த சிபிஐ.. தளபதியை தண்ணி குடிக்க வைத்த 'அந்த' 10 கேள்விகள்.. அடுத்த விசாரணை எப்போது?
அன்பில் மகேஷ் குக்கர்..! கே.என்.நேரு சாமான் செட்..! திமுகவின் தேர்தல் ஆட்டம் ஆரம்பம்..!