கூட்டணி பேச்சுவார்த்தைகாக வந்த வைகோ... சீட்டுக் கொடுக்காமல் திருப்பி அனுப்பிய துரைமுருகன்..!

By Thiraviaraj RMFirst Published Mar 4, 2019, 4:10 PM IST
Highlights

கூட்டணி பேச்சுவார்த்தைக்கு வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை திமுக கூட்டணி பேச்சு வார்த்தை குழுவினர் திருப்பி அனுப்பியதாக தகவல் வெளியாகி உள்ளது. 

கூட்டணி பேச்சுவார்த்தைக்கு வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை திமுக கூட்டணி பேச்சு வார்த்தை குழுவினர் திருப்பி அனுப்பியதாக தகவல் வெளியாகி உள்ளது. 

கூட்டணியை திமுக இறுதி செய்து வரும் நிலையில்,  இன்று காலை விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு இரு தொகுதிகளும், இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு இரு தொகுதிகளும் ஒதுக்கி உடன்பாட்டில் கையெழுத்திட்டனர். இதனை தொடர்ந்து பேசுவார்த்தைக்கு வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் உடன்பாடு ஏற்படாததால் நாளை 3ம் கட்ட பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள உள்ளனர். 

இதனைத் தொடர்ந்து கூட்டணி தொடர்பான முதல் கட்ட பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட வைகோ, 2ம் கட்ட பேச்சு வார்த்தைக்காகவும், கூட்டணியை இறுதி செய்யவும் இன்று திடீரென திமுக தலைமையகமான அறிவிவாலயத்திற்கு வந்தனர். அப்போது பேச்சுவார்த்தையில் ஈடுபடாமல் வைகோவுடன் வந்த மல்லை சத்யா உள்ளிட்டோர் திரும்பி வந்தனர்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ''வருகிற 17வது மக்களவை தேர்தலும் அத்துடன் 21 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தெலும் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுகவும் இடம்பெற்று இருக்கிறது. தொகுதிப்பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கிறது. எங்கள் இயக்கத்தின் அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி பொருளாளர் கணேசமூர்த்தி, கூட்டணி பேச்சுவார்த்தைக் குழுவினரான புலவர் செவ்வந்தியப்பன், டாக்டர்.சந்திரசேகரன் ஆகியோர் உடனடியாக இன்று இங்கு வர இயலவில்லை. இன்று பகலில் சந்திக்கலாமா என அழைத்தனர்.

 

ஆகையால் நாங்கள் மட்டும் இங்கே வந்தோம். ஆகையால் அவர்களை நாளை காலை வரச்சொல்லி இருக்கிறோம். நாளை காலை மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் எங்களுக்குள் ஆலோசனை நடத்தி விட்டு, மாலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக பேச்சுவார்த்தை குழு தலைவர் துரைமுருகனை சந்திக்க முடிவு செய்திருக்கிறோம்.

 

கூட்டணியில் தாமதம் ஏதும் ஏற்படவில்லை. திமுக பேச்சுவார்த்தை குழுவினர் திடீரென நேரில் வரச்சொன்னார்கள். பேச்சுவார்த்தை இப்போது வேண்டாம் என போனில் சொல்வதற்கு பதில் நேரில் வந்து சொல்லி விட்டு போகிறோம்’’ என வைகோ தெரிவித்தார். ஆனால், வைகோ அழைக்காமலேயே அறிவாலயம் வந்ததாகவும், தற்போதைக்கு அவருக்கு நேரம் ஒதுக்கப்படாததால் திமுக பேச்சுவார்த்தை குழு தலைவர் துரைமுருகன் ‘’ இப்போதைக்கு பேச்சுவார்த்தை நடத்த நேரமில்லை. நாளை வாருங்கள்’ என திருப்பி அனுப்பி விட்டதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. 

click me!