தளபதியை இழுக்கிறார், வளைக்கிறார், மடக்குகிறார் வைகோ!: புலம்பிக் கொட்டும் அறிவாலய புள்ளிகள். 

 
Published : Feb 18, 2018, 06:42 PM ISTUpdated : Sep 19, 2018, 01:58 AM IST
தளபதியை இழுக்கிறார், வளைக்கிறார், மடக்குகிறார் வைகோ!: புலம்பிக் கொட்டும் அறிவாலய புள்ளிகள். 

சுருக்கம்

vaiko speech in dmk stalin

’தலைவர் கலைஞர் இருந்த இடத்தில் தளபதியும்!
தளபதி இருந்த இடத்தில் அண்ணன் வைகோவுமாக
கழகம் பீடு நடை போடுகிறது’

-    என்று ஏதோ ஒரு குறும்புக்கார உறுப்பினர் எழுதிய கவித! கவித!தான் இப்போது தி.மு.க.வின் அகில இந்திய வாட்ஸ் அப் குழுக்களுக்குள் சக்கபோடு போட்டுக் கொண்டிருக்கிறது. 

இதை மேலோட்டமாக, நய்யாண்டியாக எடுத்துக் கொண்டாலுமே, இதன் உள்ளர்த்தம் உண்மைதான்! என்று ஆமோதிக்கிறார்கள் மாநில முக்கிய நிர்வாகிகள். அந்தளவுக்கு வைகோவுக்கு மிக அதிகமான முக்கியத்துவத்தை ஸ்டாலின் வழங்கி வருகிறார் என்பது அவர்களின் வருத்தமாக இருக்கிறது. 
சிம்பிளாக சொல்றதுன்னா, சில நேரங்களில் தளபதிக்கு அருகில் துரைமுருகன் இருக்க வேண்டிய இடத்தை இப்போ வைகோ பிடிச்சுட்டார்! வைகோ பிடிச்சாரோ இல்லையோ, தளபதி அவரை அங்கே கொண்டு போய் நிறுத்துகிறார்! என்று அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தில் பொங்குகிறார்கள் தி.மு.க.வின் முக்கிய  புள்ளிகள்.

தமிழகத்தில் நாள்தோறும் நடக்கும் அரசியல் நிகழ்வுகளில் உள்ள முக்கியத்துவங்கள், அது தொடர்பான பழைய ரெஃபரென்ஸுகள் ஆகியவற்றை வைகோவே ஸ்டாலினை அழைத்து சொல்கிறார் அல்லது வைகோவை அழைத்து ஸ்டாலின் கேட்கிறார்! என்றும் சொல்கிறார்கள். 
ஸ்டாலின் கொடுக்கும் இந்த முக்கியத்துவமானது, வைகோவுக்கு மிக வசந்தமக இருக்கிறது என்கிறார்கள். அதனால்தான், தன்னை நோக்கி ‘வருங்கால முதல்வரே!’ என்று முழக்கமிட்ட தொண்டரை நோக்கி ‘ஏன் நான் கூட்டணியில இருக்கிறது பிடிக்கலையா?’ என்று வைகோ செல்லக்கோபம் கொள்ளுமளவுக்கு நிலை போய்விட்டது என்று தகவல். 

சூழல் இப்படியிருக்கும் நிலையில், தி.மு.க. கூட்டணிக்குள் இன்னும் சில கட்சிகளை கொண்டு வந்து சேர்ப்பது தொடர்பாக வைகோ சொல்லும் யோசனைகளுக்கு ஸ்டாலின் தலையாட்ட துவங்கிவிட்டார் என்பதுதான் கழகத்தின் மேல் மட்டத்தினுள் இப்போது மண்டை காய வைக்கும் தகவல். 
‘நாட்டுல தி.மு.க. மட்டும்தான் கட்சியா?’ என்று விஜயதாரணி கொளுத்திப் போட்டிருப்பதன் மூலம் காங்கிரஸ் தன்னுடன் அப்படியொன்றும் பெரிய நல்லுறவில் இல்லை! என்று நினைக்கும் ஸ்டாலின் வாசனை உள்ளே இணைத்துக் கொள்ளலாம்! என்று நினைப்பதாக தகவல். த.மா.கா. வந்த பிறகும் காங்கிரஸ் உடனிருந்தால் இருக்கட்டும் அல்லது போகட்டும்! என்று நினைக்கிறாராம். அதேபோல் தெற்கில் சிதறிக்கிடக்கும் நாடார் வாக்குகளை இழுக்க சரத்குமாரையும், பா.ம.க.வுக்கு செக் வைப்பதற்காக வேல்முருகனையும், ஜவாஹிருல்லாஹ் பெரிதாக சோபிக்காத பட்சத்தில் தமீமுன்னையும் கூட உள்ளே இழுக்கலாம் என ஸ்டாலின் ஒரு முடிவில் இருக்கிறாராம். 

இந்த மாதிரியான அரசியல் மூவ்களை ஸ்டாலினுக்கு கொடுத்துக் கொண்டிருப்பது வைகோவே! அவர் நெருங்கிய பிறகுதான் தளபதி இப்படியெல்லாம் சிந்திக்கவும், செயல்படவும் துவங்குகிறார்! என்று பேசுகிறன்றனர் தி.மு.க.வின் முக்கிய புள்ளிகள். 
வைகோவின் அரசியல் ராசியானது, ஸ்டாலினை எங்கே கொண்டுபோய் நிறுத்துமோ!? என்பதே அவர்களின் ஒரே கவலை. 
 

PREV
click me!

Recommended Stories

விஜய்யும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்.. மதுரையில் திருமா பரபரப்பு பேச்சு
ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!