அதிமுகவை சீண்டிவிட்ட பிகிலு விஜய்... விடாமல் ரவுண்டுகட்டி ஆடிய பொலிட்டிகள் கேம்...

By sathish kFirst Published Sep 20, 2019, 12:23 PM IST
Highlights

யாரை எங்கே வைக்க வேண்டுமோ? அங்கே தான் வைக்க வேண்டும் என்று விஜய் பேசிய அரசியல் பேச்சுக்கு அதிமுகவிலிருந்து எதிர்ப்புக்குரல் எழுந்துள்ளது.

அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் மெர்சலுக்கு பிறகு இணைந்துள்ள படம் பிகில். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இப்படத்தில் நடிகர் கதிர், ஜாக்கி ஷெராப், விவேக், டேனியல் பாலாஜி, ஆனந்த் ராஜ், யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். 

இந்த விழாவில் வழக்கம் நடிகர் விஜய் அரசியல் பேசினார். அண்மைக்காலமாக மெர்சல், சர்கார் என ஒவ்வொரு படத்தின் இசை வெளியீட்டு விழாவிலும் விஜய்யின் காரசாரமான அரசியல் அரசியல் பேச்சு விஜய் பிகில் பட இசை வெளியீட்டு விழாவிலும் அனல் தெறித்தது. அதுவும் ஆளும் கட்சியினரை நேரடியாக தாக்கும் விதமாக, சுபஸ்ரீ மரணம் குறித்த பேச்சு முதலில் இருந்தது.  அதில், யார் மீது கோபப்பட வேண்டுமோ அவர்கள் மீது கோபப்படாமல், யார் யார் மீதோ பழி போடுகிறார்கள் என அவரின் பேச்சு ஆளும்கட்சியை நேரடியாக தாக்கும் விதமாகா இருந்தது.

அடுத்ததாக வாழ்ககை ஒரு கால்பந்து விளையாட்டு மாதிரிதான். நாம் கோல் அடிக்க ஆசைப்படுவோம். அதைத் தடுக்க ஒரு கூட்டம் வரும். நம்ம கூட இருக்குறவனே சேம்சைட் கோல் போட்ருவான். 

அரசியலில் புகுந்து விளையாடுங்கள், ஆனால் விளையாட்டில் அரசியல் வேண்டாம்.
சமூக வளைதளங்களை நல்ல விஷயங்களுக்காக பயன்படுத்துங்கள். சமூக பிரச்சனைகளுக்கு ஹேஷ்டேக் உருவாக்கி ட்ரெண்ட் செய்யுங்கள்.

#என்னுடைய போஸ்டர்களை கிழித்தாலும் பரவாயில்லை. என் ரசிகர்கள் மீது கை வைக்க வேண்டாம்.

கடைசியாக தனது குட்டிக்கதையில்,. யாரை எங்கு உட்கார வைக்க வேண்டுமோ, அவரை அங்கு உட்கார வைத்தால் அனைத்தும் சரியாக இருக்கும் என நேரடியாகவே அதிமுகவை தாக்கும் விதமாக இருந்தது.விஜய்யின் இந்த நேரடித் தாக்குதல், அரசியல் ரீதியாக சர்ச்சைகளுக்கு வித்திட்டுள்ளது. 

அதிமுக அரசை தொடர்ந்து விஜய் தாக்கி பேசி வருவதாக சொல்லப்பட்ட நிலையில், இதுபற்றி அ.தி.மு.க பிரசாரக் குழு தலைவர் வைகைச்செல்வன் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில்; திரைப்படங்கள் 20 நாளுக்கு மேல் ஓடுவதே கஷ்டமாக உள்ளது. படங்களை பரபரப்புக்கு உள்ளாக்க அரசியல் தேவைப்படுகிறது. அந்த காலத்தில்  கதையை நம்பி படம் எடுத்ததால் நீண்ட காலம் படம் ஓடியது, அது ஏன் ஒரு வருஷம் வரை ஓடிய வரலாறு உள்ளது. ஆனால் இப்போது அப்படி இல்லை. கதையே இல்லாத படத்தை எடுத்துவிட்டு 2 மாத காலத்திற்கு ஓட்டுவதற்குதான் இது போன்ற விழாவில், அரசியல் பேசப்படுகிறது. இப்படி பரபரப்புக்கு உள்ளாக்கி, படத்தை ஓட வைக்க பல நடிகர்கள் இருக்கிறார்கள். அதில் விஜய்யும் குறிப்பிடத்தக்கவராக இருக்கிறார். இப்படித்தான் சமீபகாலமாக அவரது படங்கள் ஓடிக்கொண்டு இருக்கிறது.

யாரை எங்கே வைக்க வேண்டுமோ? அங்கே தான் வைக்க வேண்டும் என்று விஜய் குறிப்பிட்டுள்ளார். யாரை எங்கே வைக்க வேண்டுமோ அங்கே தான் அவர்களை தமிழக மக்கள் வைத்துள்ளார்கள். புரட்சித்தலைவர், அம்மா, எடப்பாடி அண்ணன், பன்னீர் அண்ணன் வரை, அதிமுக ஆட்சி நீடிக்க வேண்டும் என்பதுதான் மக்களின் எண்ணமாக இருக்கிறது.

அதிமுக அரசு அடுத்தடுத்து 2 வது முறையாக ஆட்சி செய்து வருகிறது. தொடர்ந்து 10 வருட காலமாக அதிமுக ஆட்சிதான் நடைபெற்று வருகிறது. 10 வருடங்களாக விஜய் படங்கள் வெளியாகிக் கொண்டு தான் இருக்கின்றது. எனவே அவருக்கு எந்த தொல்லையும் கொடுக்கவில்லை என்பது தானே உண்மை, ஆனால் தனது படங்களை ஓட வைப்பதற்காக இது போன்ற விழாக்களில் விஜய் பரபரப்புக்கு பேசி வருகிறார் என இவ்வாறு வைகை செல்வன் தெரிவித்தார்.

click me!