அமெரிக்க அதிபர் சாப்பிட்ட சாப்பாடு மெனு.!! இந்திய ஜனாதிபதி அசத்திய விருந்து.!!

Published : Feb 26, 2020, 10:31 AM IST
அமெரிக்க அதிபர் சாப்பிட்ட சாப்பாடு மெனு.!!   இந்திய  ஜனாதிபதி அசத்திய விருந்து.!!

சுருக்கம்

அமெரிக்க அதிபர் குடும்பமே அசந்து போகும் அளவிற்கு விதவிதமான இந்திய மற்றும் வெளிநாட்டு உணவு வகைகள் தயாரித்து விருந்தில் பரிமாறப்பட்டது. விருந்து முடிந்ததும் ட்ரம்ப் குடும்பத்தினர் இந்திய உணவு எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது என்று புகழ்ந்திருக்கிறார்கள்.

T.Balamurukan

அமெரிக்கா அதிபர் ட்ரம்ப தனது மனைவி மெலனியா, மகள் இவான்கா ஆகியோருடன் இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்தார். இப்பயணத்தின் முடிவாக நேற்று இந்திய ஜனாதிபதி மாளிகையில் விருந்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார் ராம்நாத்கோவிந்த்.
இவர்களுக்காக அமெரிக்க சுவையுடன் கூடிய இந்திய உணவு வகைகள் அடங்கிய மெனு தயாரிக்கப்பட்டது. சைவ மற்றும் அசைவம் அடங்கிய அந்த மெனுவில் .' புகை பிடித்த ஆரஞ்சு பீல் பன்னா கோட்டா, எலுமிச்சை புல், கொத்தமல்லி ஷோர்பா, சால்மன் மீன் டிக்கா, ஆலுடிக்கி கீரை சாட்,ஷீர்மல்,நான் ரொட்டி மற்றும் பலவகையான சூப் வகைகளுடன் விருந்து தொடங்கியது.

ஜனாதிபதி மாளிகையில் புகழ்பெற்ற தால் ரைசினாவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.ட்ரம்ப் அசைவ பிரியர் என்பதால் அவருக்கு சுவையான டம் கோஷ்ட் பிரியாணி, ரோகனி கிரேவியில் ரான்அலிசன், டம் குச்சி மாதார் ,புதினா ரைட்டாவும் மெனுவில்; இடம் பெற்றிருந்தன. சுவீட்ஸ் பொறுத்தவரை வெணிலா ஐஸ்கிரீமுடன் ஹேசல்நட் ஆப்பிளையும் ரப்தியுடன் மலபுவாவையும் ரசித்து சாப்பிட்டார். இந்த உணவுகள் அனைத்திலும் குங்குமப்பூ கலந்து மட்டன் கிரேவியில் கலந்திருந்தது விசே~ம். ஜனாதிபதி மாளிகையில்  பயிற்சி பெற்ற 32 சமையல்காரர்கள் இந்த உணவு தயாரிப்பில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
 
PREV
click me!

Recommended Stories

விருகம்பாக்கம் தொகுதி யாருக்கு..? பிரபாகர் ராஜாவா..? தனசேகரனா..? ட்விஸ்ட் வைக்கும் திமுக தலைமை..!
பாரதியாரே நமக்கு சல்லி... சப்ப பீஸு..! மகாகவியை ரொம்ப கேவலமாக பேசும் திமுக கூட்டம்..!