உ.பி. 5-ம் கட்ட தேர்தல் பிரசாரம் நாளையுடன் முடிவு - இனி தேர்தல்தான்...

 
Published : Feb 24, 2017, 08:26 PM ISTUpdated : Sep 19, 2018, 01:39 AM IST
உ.பி. 5-ம் கட்ட தேர்தல் பிரசாரம் நாளையுடன் முடிவு - இனி தேர்தல்தான்...

சுருக்கம்

உத்தரப்பிரதேசத்தில் 51  தொகுதிகளுக்கான 5-ம் கட்ட தேர்தல் பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் முடிகிறது. நாளை மறுநாள் தேர்தல் நடைபெறுகிறது.

உத்தரப்பிரதேசத்தில் உள்ள 403 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. இதுவரை 4 கட்டங்களாக 262 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்துள்ளது.

பல்ராம்பூர், கோன்டா, பைசாபாத், அம்பேத்கர் நகர், பஹாரைச், சராவஸ்தி, சித்தார்த் நகர், பஸ்தி, சந்த் கபீர் நகர், அமேதி, மற்றும் சுல்தான் பூர் ஆகிய 11 மாவட்டங்களில் உள்ள 51 தொகுதிகளுக்கான தேர்தல் நாளை மறுநாள் நடக்க உள்ளது.

இதனால் சமாஜ்வாதி-காங்கிரஸ் கூட்டணி, பாரதிய ஜனதா, பகுஜன் சமாஜ் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இன்று மாலை அமேதி மக்களளைத் தொகுதியில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.

இந்த 51 தொகுதிகளில் மொத்தம் 608 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அதிகபட்சமாக அமேதியில் 24 வேட்பாளர்களும், குறைந்த பட்சமாக கபிலவஸ்து,எட்வா தொகுதியில் 6 வேட்பாளர்களும் உள்ளனர்.

ஒட்டுமொத்த 96 லட்சம் பெண்கள் உள்ளிட்ட 1.84 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

சமீபத்தில் சமாஜ்வாதி அரசில் அமைச்சராக இருக்கும் காயத்ரி பிரசாத் பிரஜாபதி, காங்கிரஸ் கட்சியின் அமிதா சிங், பாரதியஜனதாவின் கரிமா சிங் ஆகியோர் முக்கிய வேட்பாளர்கள் ஆவர்.

இதில் பிரசாத்  பிரஜாபதி ஒரு பெண்ணையும், அவரின் குழந்தையையும் பாலியல் பாலாத்காரம் செய்த வழக்கில் உச்சநீதிமன்றம் தலையிட்டு வழக்குபதிவு செய்யக்கூறியது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

நான் காமராஜரை பற்றி பேசியதை வதந்தி பரப்புகிறார்கள்..! மன்னிப்புக்கேட்ட முக்தார்..!
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு