பெரியப்பா ஸ்டாலினின் கனவு நிறைவேறுமா?: களமிறங்கிய மகேஷ்..!! கத்தியை தீட்டும் கோஷ்டிகள், கதறும் தி.மு.க.!!

By Asianet TamilFirst Published Sep 14, 2019, 5:05 PM IST
Highlights

அவரை ஃபீல்டு அவுட் ஆக்கும் வண்ணம் வெளியே தெரியாமல் இந்த அதிருப்தி நிர்வாகிகள் கோஷ்டி கோஷ்டியாக பிரிந்து செயல்பட துவங்கிவிட்டனர்.  மகேஷுக்கு எதிரான பிரசாரங்களும் கூட கொங்கு தி.மு.க.வில் களை கட்ட துவங்கிவிட்டன. மகேஷ் வருகைக்குப் பின் பெரும் ஒற்றுமை, எழுச்சி ஆகியவற்றைக் காட்டிவிட்டால் நிரந்தரமாக அவரை இங்கே அதிகாரியாக்கிடுவார் ஸ்டாலின்! என நினைப்பவர்கள், மகேஷின் இழுப்புக்கு இசைந்து கொடுப்பதில்லை.

கருணாநிதியின் ஆருயிர் நண்பர் அன்பில் தர்மலிங்கம், அவரது மகன் ஸ்டாலினோ தர்மலிங்கத்தின் மகன் அன்பில் பொய்யாமொழியோடு நகமும் சதையும் போல. இரண்டு தலைமுறைகளாக வந்த இந்த நட்பு, மூன்றாவது தலைமுறையிலும் தொடர்கிறது.  ஆனால் இந்த முறை வெறும் நட்புப் பாசம் மட்டுமல்ல உறவு, அரசியல், பதவி என்று மேலும் மேலும் இறுக்கமாகி இருக்கிறது.  ஆனால் இதுவே ஸ்டாலினின் கனவுக்கு வேட்டு வைத்துவிடுமா? என்பதுதான் குழப்பமே.

ஸ்டாலினின் மகன் உதயநிதியின் மிக நெருங்கிய நண்பராக இருக்கிறார் அன்பில் மகேஷ். உதய் சினிமாவில் நடிக்க துவங்கியதும், அவரது ரசிகர் மன்றத்தின் தலைமை அமைப்பாளராக ஆனார். அதன் பின் இளைஞரணியில் மாநில பதவி வழங்கப்பட்டு, பின் கடந்த சட்டமன்ற தேர்தலில் திருச்சி மாவடத்தில் சீட்டும் வழங்கப்பட்டு எம்.எல்.ஏ.வாகிவிட்டார். அன்பிலின் இந்த வளர்ச்சி திருச்சி தி.மு.க.வின் மன்னரான கே.என்.நேருவுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. இந்த நிலையில் மகேஷை இப்போது கொங்கு மண்டல தி.மு.க. இளைஞரணியின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவரை இங்கு நியமனம் செய்ய காரணம்? மகேஷ் உதயநிதியின் நண்பன், தன் ஆருயிர் நண்பனின் மகன் என்பதையெல்லாம் தாண்டி அவரை தன் மகன் போலவே பார்க்கிறார். ஸ்டாலினை மகேஷ் ‘பெரியப்பா’ என்றுதான் கூப்பிடுவார். துர்காவை ‘பெரியம்மா’ என்றுதான் கூப்பிடுவார். அந்த குடும்பத்தினுள் அவருக்கு அப்படியொரு சுதந்திரம், அன்பு, மரியாதை எல்லாமே.

 
இந்நிலையில் கொங்கு மண்டல தி.மு.க. இளைஞரணியில் முக்கிய நிர்வாகிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். இளைஞரணியில் மகேஷ் இருக்கும் அதே பொறுப்பை மாஜி அமைச்சர் பொங்கலூர் பழனிசாமியின் மகன் பாரி வைத்துள்ளார்.  திருப்பூரில் இளைஞரணியின் மாஜி மாநில செயலாளரான சாமிநாதன் இருக்கிறார். இவர்களையெல்லாம் தாண்டி கொங்கு மண்டல பொறுப்பாளராக மகேஷை நியமித்ததில் அம்மண்டலத்தில் யாருக்கும் உடன்பாடில்லை. குறிப்பாக தினகரனிடமிருந்து பிரிந்து, ஆர்ப்பாட்டமாக தி.மு.க.வில் வந்து இணைந்து, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அண்டர்பிளே வேலைகளை செய்து அ.தி.மு.க.வின் கோட்டையாக இருந்த கொங்குவை தி.மு.க.வின் கோட்டையாக மாற்றியதில் பெரும் பங்கு செந்தில்பாலாஜிக்கு உள்ளது. 

அவருக்கும் மகேஷின் வரவு பிடிக்கவில்லை. மகேஷ் ஸ்டாலினை பெரியப்பா, பெரியப்பா என நெருக்கம் காட்டுகிறார். நம்மைப் பற்றி எதையும் ஸ்டாலினிடம் போட்டுக் கொடுத்து காலி பண்ணிடுவார். எனவே அவருடைய செல்வாக்கு இந்த மண்டலத்தில் செல்லாதபடி பார்க்க வேண்டும். கொங்கு மண்லத்தை தான் நிச்சயம் வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தருவேன் எனும் நம்பிக்கையுடன் பெரியப்பா தனக்கு இந்த பொறுப்பை தந்துள்ளார். எனவே இதை நிறைவேற்றியே ஆக வேண்டும்! எனும் வெறியுடன் மகேஷ் கொங்கில் உழைக்க துவங்கியுள்ளார்.

 
ஆனால் துவக்கத்திலேயே அவரை ஃபீல்டு அவுட் ஆக்கும் வண்ணம் வெளியே தெரியாமல் இந்த அதிருப்தி நிர்வாகிகள் கோஷ்டி கோஷ்டியாக பிரிந்து செயல்பட துவங்கிவிட்டனர்.  மகேஷுக்கு எதிரான பிரசாரங்களும் கூட கொங்கு தி.மு.க.வில் களை கட்ட துவங்கிவிட்டன. மகேஷ் வருகைக்குப் பின் பெரும் ஒற்றுமை, எழுச்சி ஆகியவற்றைக் காட்டிவிட்டால் நிரந்தரமாக அவரை இங்கே அதிகாரியாக்கிடுவார் ஸ்டாலின்! என நினைப்பவர்கள், மகேஷின் இழுப்புக்கு இசைந்து கொடுப்பதில்லை. இவர்களின் ஒத்துழையாமை இயக்கத்தைப் பார்த்து மகேஷுக்கு ‘பெரியப்பாவோட நம்பிக்கையை காப்பாத்த முடியுமா நம்மால?’ என்று பயம் போட்டு ஆட்ட துவங்கிவிட்டதாம். ஆக இந்த உள் குழப்ப நிலையால் கொங்கு மண்டல தி.மு.க. தொண்டர்கள்தான் குழம்பிக் கிடக்கின்றனர். மீண்டும் ஆட்சியை கொங்கில் தோற்பதன் மூலம் இழக்கப்போகிறோமோ!? என அரண்டு கிடக்கின்றனராம். வெளங்கிடும்!
 

click me!