உக்ரேனியர்கள் வீரம் மிக்கவர்கள்.. அவர்களை கை விட்டுட்டீங்களே.. நாடாளுமன்றத்தில் கதறிய தமிழக எம்.பி..

Published : Mar 15, 2022, 06:24 PM IST
உக்ரேனியர்கள் வீரம் மிக்கவர்கள்.. அவர்களை கை விட்டுட்டீங்களே.. நாடாளுமன்றத்தில் கதறிய தமிழக எம்.பி..

சுருக்கம்

இந்தியா உக்ரேனுக்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டும், ரஷ்ய அதிபருடன் பேசி போரை நிறுத்த முயற்சிக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை வைத்தும் இந்தியாவில் பெரிய அளவில் அதை கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில்தான் ரஷ்யா உக்ரைன் இடையேயான போரில் இந்திய கடமை தவறி விட்டது என மாநிலங்களவையில் வைகோ பேசியுள்ளார். 

ரஷ்யா - உக்ரைன் விவகாரத்தில் இந்தியா கடமையை தவறிவிட்டது என மதிமுக பொதுச்செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ விமர்சித்துள்ளார்.  பல இடங்களில் மோதல்கள் நடைபெற்ற போதெல்லாம் இந்தியா நடுநிலைமை வகித்து வந்த நிலையில் ரஷ்யா உக்ரேன் விவகாரத்தில் ஒரு பக்க சார்பாக இந்தியா நடந்து கொண்டுள்ளது என்ன வைகோ நாடாளுமன்றத்தில் குற்றம்சாட்டியுள்ளார்

கடந்த 20 நாட்களுக்கும் மேலாக ரஷ்யா உக்ரைன் இடையே போர் நடந்து வருகிறது. துவக்கத்தில் எல்லை பகுதிகளில் தாக்குதல் நடத்திய ரஷ்யா, தற்போது உக்ரேனின்  மையப் பகுதிகளில் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. இதனால் பொதுமக்கள், குடியிருப்புகள், மருத்துவமனைகள் மீது குண்டுகள் வீசப்பட்டு வருகிறது. இதில் மக்கள் கொத்துக் கொத்தாக உயிரிழந்து வருகின்றனர். நோட்டா நாடுகள் அணியில் சேரும் முயற்சியை உக்ரேன் கைவிட வேண்டுமென வலியுறுத்தி ரஷ்யா இந்த தாக்குதலை நடத்தி வருகிறது. ஆனால் எத்தனை தாக்குதல் நடத்தினாலும் ஒருபோதும் உக்ரைன் சரண் அடையாது என அந்நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி வீரவசனம் பேசி வருகிறார்.  இதன் எதிரொலியாக ரஷ்யா தாக்குதலை தினம் தினம் தீவிரப்படுத்தி வருகிறது.

 

இதில் உக்ரைனில் கொஞ்ச கொஞ்சமாக உருக்குலைந்து வருகிறது. லட்சக்கணக்கான மக்கள் நாட்டைவிட்டு வெளியேறி அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சமடைந்து வருகின்றனர். நாட்டிற்கு சுற்றுலா மற்றும் படிக்க சென்ற பல்வேறு வெளிநாட்டு மாணவர்கள் அந்நாட்டை விட்டு வெளியேறி உயிர்த் தப்பி வருகின்றனர். கடந்த 20 நாட்களுக்கும் மேலாக ரஷ்யா நடத்தி வரும் உக்கிர தாக்குதலில் ஒட்டு மொத்த உக்ரேனும் நிலைகுலைந்து போயுள்ளது. திரும்பிய பக்கமெல்லாம் குண்டுவெடிப்பு, துப்பாக்கிச் சத்தம், ஏவுகணைத் தாக்குதல் என புகை மண்டலமாக காட்சியளிக்கிறது உக்ரேன். பல முக்கிய நகரங்களை ரஷ்ய ராணுவம் கைப்பற்றியுள்ளது. ஆனாலும் அந்நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி தங்களிடம் கடைசி ஆயுதம் உள்ள வரை போராடுவோம் என உறுதி கூறியுள்ளார். இது மேலும் மேலும் உக்ரைனுக்கு பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

இந்த விவகாரத்தில் பல நாடுகள் ரஷ்யாவை எச்சரித்தாலும் உக்ரேனுக்கு ஆதரவாக எவரும் களமிறங்கவில்லை. உக்ரைனுக்கு  ஆயுதங்கள் வழங்கப்படும் என அறிவித்த அமெரிக்காவும் சொன்னபடி உதவ வில்லை. இதனால் மிகப்பெரிய வல்லரசான ரஷ்யாவை குட்டி நாடு உக்ரேன் தன்னந்தனியாக போராடும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தைப் பொறுத்தவரையில் இந்தியா நடுநிலை வகிப்பதாக கூறி ரஷ்யாவுக்கு எதிராக ஐநா மன்றம் கொண்டு வந்த தீர்மானத்தை புறக்கணித்துள்ளது. ரஷ்யா இந்தியாவின் நட்பு நாடு என்பதால் ரஷ்யாவை பகைத்துக்கொள்ள இந்தியா விரும்பவில்லை, அதேநேரத்தில் உக்ரைனுக்கு எதிராக வாக்களித்த உக்ரேனின்  விரோதத்தை சம்பாதிக்கவும் இந்தியா விரும்பவில்லை. இதன் காரணமாகவே வாக்கெடுப்பில் இருந்து விலகிகொண்டது. 

இந்தியா உக்ரேனுக்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டும், ரஷ்ய அதிபருடன் பேசி போரை நிறுத்த முயற்சிக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை வைத்தும் இந்தியாவில் பெரிய அளவில் அதை கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில்தான் ரஷ்யா உக்ரைன் இடையேயான போரில் இந்திய கடமை தவறி விட்டது என மாநிலங்களவையில் வைகோ பேசியுள்ளார். இதுதொடர்பாக அவர் மாநிலங்களவையில் ஆற்றிய உரையில் விவரம் பின்வருமாறு:-  உக்ரைன் மீது ரஷ்யா நடத்துகின்ற தாக்குதல் நியாயம் அற்றது. உக்ரேனியர்கள் வீரம் மிக்கவர்கள். எத்தகைய தாக்குதல் என்றாலும் தாக்குப் பிடிப்பார்கள். கடந்த காலங்களில், ரஷ்யா மீது, பிற நாடுகள் படையெடுத்தபோது, முன்களப் போராளிகளாக நின்று, அதைத் தடுத்து நிறுத்தியவர்கள் உக்ரேனியர்கள்தான். 

கடந்த இருபது நாட்களாகப் போர் தொடர்கின்றது. இதற்கு முன்னர், உலகில் பல இடங்களில் இப்படிப்பட்ட மோதல்கள் நடைபெற்ற போதெல்லாம், இந்தியா நடுநிலைமை நாடுகளுக்குத் தலைமை தாங்கி, அணி சேராக் கொள்கையை நிலை நிறுத்தியது. அதனால், இந்தியாவின் மதிப்பு உலக நாடுகள் இடையே உயர்ந்து ஓங்கி இருந்தது. ஆனால், இம்முறை இந்தியா ஒரு பக்கச் சார்பாக நடந்து கொள்கின்றது.  உக்ரைன் மீதான ரஷ்யத் தாக்குதல் தொடர்பாக ஐ.நா. மன்றத்தின் பாதுகாப்புச் சபையிலும், பொதுச்சபையிலும், விவாதம் எழுந்தபோது, இந்திய அரசு, தன் கடமையைச் செய்யவில்லை எனக் குற்றம் சாட்டுகின்றேன். இவ்வாறு, வைகோ பேசினார்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இந்த திமுகவை நம்பாதீங்க..! மக்களை நம்ப வைச்சு ஏமாற்றுவதுதான் அவங்க வேலையே..! விஜய் எச்சரிக்கை..!
12 நிமிடத்தில் உரையை முடித்த விஜய்.. அப்செட்டான தொண்டர்கள்..!