உதயநிதியா... இல்லை கருணாநிதியா...!! திமுக தொண்டர்களை கட்டிப்போட்ட அந்த கடிதம்..!!

By Asianet TamilFirst Published Sep 14, 2019, 7:56 PM IST
Highlights

விதவிதமான புகைப்படங்களுடன் பேனர் வைப்பது, சால்வை அணிவிப்பது, பட்டங்கள் சொல்லி முழங்குவது, பட்டாசுகளை கொளுத்தி போடுவது இவை எதுவும் நமக்கு இடையேயான அன்பை பிணைப்பை அதிகரிக்கப் போவதில்லை...

விதவிதமானபுகைக்கபடங்களுடன்  பேனர் வைப்பது, சால்வை அணிவிப்பது, பட்டங்கள் சொல்லி முழங்குவது, பட்டாசுகளை கொளுத்திப்போடுவது, இவை எதுவும்  நமக்கிடையேயான அன்பை  பிணைப்பை அதிகரிக்கப்போவதில்லை... இது ஏதோ சினிமா வசனங்கள் அள்ள,  திமுக இளைஞர் அணி செயலாளர் உதய நிதி தன் கட்சி இளைஞர்களுக்கு  விதித்துள்ள (விடுத்துள்ள) அன்பு கட்டளை இது. பள்ளிக்கரணையில் கட்டவுட் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்ததையடுத்து , திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி  புல்லரிக்கும் அட்வைஸ்களை கட்சி தொண்டர்களுக்கு அள்ளி வழங்கி வருகிறார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு.

சென்னை குரோம்பேட்டை நெமிலிச்சேரி பவானி நகரைச்சேர்ந்தவர் சுபஸ்ரீ பி.டெக். மெக்கட்ரானிக்ஸ் படித்தவர். தனியார் நிறுவனம் என்றில் தொழில்நுட்ப எழுத்தாளராக பணியாற்றிவர். மேற்படிப்பை கனடாவில் தொடர ஐஇஎல்டிஎஸ் தேர்வுகளை முடித்திருந்தவர். கடந்த புதனன்று அதற்கான நேர்காணல்களையும் நிறைவுச் செய்திருந்தார். அன்றுர அவர் பயணித்த சென்னை பள்ளிக்கரணை ரேடியல் சாலையில் அந்த பேனர் மட்டும் வைக்கப்படாமல் இருந்திருந்தால் சுபஸ்ரீ இந்நேரம் உயிருடன் இருந்திருப்பார். சிலரின் சுய நல அரசியலால். ஒர் இளம் பெண்ணின் கனவு கருக்கிப்போயுள்ளது. 

இத்தனை ஆண்டுகள் அவர் கற்ற கல்வி, வளர்த்துக்கொண்ட அறிவு அத்தனையும் கனவாகி உள்ளது.  அவரை வளர்த்தெடுத்து கண்கொள்ளாக் கனவுகளுடன் வலம் வந்த அந்தப் பெற்றோரை நினைக்கையில் மனம் கனக்கிறது.  ”சுபஸ்ரீ எங்களுக்கு ஒரே மகன் எங்களுக்கு நேர்ந்த இந்தத் துயரம் எவருக்கும் நேரக்கூடாது அந்த சாலையில் பேனர் வைக்கப்படாமல் இருந்திருந்தால் என் மகள் வீடு திரும்பி இருப்பாள் இந்த பேனர் கலாச்சாரம் ஒழிய வேண்டும் இதுதான் எனது வேண்டுகோள்” அந்த நிலையிலும் சுபஸ்ரீயின் தந்தை தன் நிதானத்தை இழக்காமல் தெரிவித்த இந்த கருத்துக்கள் நம் ஒவ்வொருவருக்குமான பாடம் 

சுபஸ்ரீ குடும்பத்தாரின் துக்கத்தில் பங்கு எடுப்பதோடு அவர் தந்தையாரின் வார்த்தைகளையே உங்களுக்கு வழிமொழிகிறேன்... விதவிதமான புகைப்படங்களுடன் பேனர் வைப்பது, சால்வை அணிவிப்பது, பட்டங்கள் சொல்லி முழங்குவது, பட்டாசுகளை கொளுத்தி போடுவது இவை எதுவும் நமக்கு இடையேயான அன்பை பிணைப்பை அதிகரிக்கப் போவதில்லை.

தவிற  நீங்கள் நான் என நாம் அனைவரும் மக்களின் வாக்குகளை விட அவர்களின் மனங்களை வெற்றி கொள்ளவே உழைக்கிறோம் அவர்களை சென்றடைய சமூக பொறுப்புள்ள நம் செயல்களே ஒரேவழி.  ஆனால் அந்த ஒரு நிமிட உணர்ச்சிப் பெருக்குக்காக எங்களை மகிழ்விப்பதாக நினைத்து உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ளாதீர்கள் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.  சுபஸ்ரீ நம்மைவிட்டுப் பிரிந்த நாளை மனதில்கொண்டு இனி தொடங்கும் உறுப்பினர் சேர்க்கை முகாமில் தொடங்கி  இனி நம் இளைஞரணி நிகழ்ச்சிகளில் எதிலும் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்கள் வைப்பதை தவிர்க்க வேண்டும் இவ்வாறு தன் அறிக்கையில் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
 

click me!