திருநீறு பிரச்சனையை அணைக்கவே ஆதீன மடத்துக்கு போன உதயநிதி..! அமைச்சர் பாண்டியராஜன் ஓப்பன் டாக்..!

Published : Nov 23, 2020, 09:58 PM IST
திருநீறு பிரச்சனையை அணைக்கவே ஆதீன மடத்துக்கு போன உதயநிதி..! அமைச்சர் பாண்டியராஜன் ஓப்பன் டாக்..!

சுருக்கம்

ஸ்டாலின் தேவர் குருபூஜைக்கு சென்ற போது திருநீறு அவமதித்த சம்பவம் பெரும் காட்டு தீயாக அனையாமல் எரிந்து கொண்டிருக்கிறது.தன் தந்தைக்கு ஏற்பட்ட திருநீறு பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கவே  உதயநிதி ஸ்டாலின் தருமபுரம் மடத்திற்கு சென்று ஆதீனத்தை சந்தித்து ஆசி பெற்றிருக்கிறார் என தெரிவித்துள்ளார்.

அதிமுக கூட்டணிக்கு மேலும் 2 கட்சிகள் வர உள்ளதாக, தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக சென்னை ஆவடியில் செய்தியாளர்களை சந்தித்து பேசியவர்... "அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், நாடாளுமன்ற தேர்தலை போல அல்லாமல், தற்போது 6 மாதத்திற்கு முன்பே கூட்டணி உறுதியானதால், களப்பணி செய்து தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெறுவோம். தற்போதைய கூட்டணி உறுதியாக இருப்பதாகவும், மேலும் 2 கட்சிகள் கூட்டணிக்கு வர உள்ளதாகவும் அமித்ஷா வருகையின் போது, 7 பேர் விடுதலை குறித்து கோரிக்கை வைக்கவில்லை என்று தெரிவித்த அமைச்சர் பாண்டியராஜன், இந்த விவகாரத்தில் சட்ட ஆலோசனை கிடைத்த பிறகு, ஆளுநர் முடிவெடுப்பார் என தாம் நம்புவதாகவும் தெரிவித்தார்.  

ஸ்டாலின் தேவர் குருபூஜைக்கு சென்ற போது திருநீறு அவமதித்த சம்பவம் பெரும் காட்டு தீயாக அனையாமல் எரிந்து கொண்டிருக்கிறது.தன் தந்தைக்கு ஏற்பட்ட திருநீறு பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கவே  உதயநிதி ஸ்டாலின் தருமபுரம் மடத்திற்கு சென்று ஆதீனத்தை சந்தித்து ஆசி பெற்றிருக்கிறார் என தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

ஓரங்கட்டப்பட்ட ஓடி ஓடி வேலை செய்த அஜிதா அஃனஸ்..! தவெகவில் தடுத்து நிறுத்தப்பட்ட பெண் நிர்வாகி
41 பேரை கொன்று குவித்த நடிகர் விஜய் பின்னால் செல்வது ஏன்..? கிறிஸ்தவ மத முதல்வர் காட்வின் எதிர்ப்பு.. தவெக அதிர்ச்சி..!