"ஒரே கொடி"... ஓங்கி பிடித்த உதயநிதி ..! போராட்டத்தில் நடந்த ஹைலைட்ஸ்..!

By ezhil mozhiFirst Published Dec 13, 2019, 1:12 PM IST
Highlights

சைதாப்பேட்டை பஜார் சாலையில் இருந்து ஊர்வலமாக தொடங்கி தபால் நிலையம் வரை ஊர்வலமாக தனது தொண்டர்களுடன் சென்றார் உதயநிதி. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கட்டுப்படுத் போலீசார் முயன்றனர். 

"ஒரே கொடி"... ஓங்கி பிடித்த உதயநிதி ..! போராட்டத்தில் நடந்த ஹைலைட்ஸ்..! 

புதிய குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து உதயநிதி ஸ்டாலின் தலைமையில் பனகல் மாளிகை முன்பு பாஜக அதிமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  

சைதாப்பேட்டை பஜார் சாலையில் இருந்து ஊர்வலமாக தொடங்கி தபால் நிலையம் வரை ஊர்வலமாக தனது தொண்டர்களுடன் சென்றார் உதயநிதி. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கட்டுப்படுத் போலீசார் முயன்றனர். பின்னர் உதயநிதி மற்றும் தொண்டர்களை கைது செய்து அரசு பேருந்தில் ஏற்றி பனகல் மாளிகை வளைவு வரை அழைத்து வந்தனர். மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டதால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இந்த போராட்ட்டத்தில், அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சங்களான மதசார்பின்மை, சம உரிமை, சகோதரத்துவம்,சுதந்திரம் உள்ளிட்ட அனைத்தையும் குடியுரிமை திருத்த சட்டம் மூலம் பாஜக தகர்த்து உள்ளது என்றும், இதற்கு அதிமுக அரசு துணை நின்று உள்ளது என போர்க்கொடி தூக்கி உள்ளார் உதயநிதி ஸ்டாலின்.

உதயநிதியை தமிழக மக்களுக்கு அடையாளம் காண வைத்ததே... அவருடைய சினிமா என்ட்ரி மூலம் தான். இந்த நிலையில், கலைஞர் கருணாநிதிக்கு பிறகு திமுக அரசியல் வாரிசு ஸ்டாலின் என்றானது. இந்த நிலையில் ஸ்டாலினை பின்பற்றி இப்போதே அரசியலுக்கு வந்துவிட்டார் உதயநிதி ஸ்டாலின்.மேலும் திமுகவில் மிக முக்கிய பொறுப்பான ஸ்டாலின் வகித்த  இளைஞரணி செயலாளர் பதவியை உதயநிதிக்கு வழகப்பட்டது. இதன் மூலம் சரியான  நேர்கோட்டில் பயணிக்கும் உதயநிதி, திமுகவின் பலத்தை கூட்டுவதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறார். இதனை தொடர்ந்து புதிய குடியுரிமை சட்டத்திற்கு எதிர்த்து, சிறுபான்மையினருக்கு ஆதரவு தெரிவிக்கும் பொருட்டு ஆளும் கட்சிக்கு எதிராக தற்போது போராட்டத்தில் குதித்து உள்ளார் உதயநிதி  

மாநிலங்களவையில் அதிமுக ஆதரவு,  இந்த தமிழர் விரோத குடியுரிமை மசோதா வாக்கெடுப்பில் வெற்றி பெறுவதற்கு மிக முக்கிய காரணமாக அமைந்து விட்டது என்றும், மத்திய பாஜக அரசின் சிறுபான்மையினர் விரோத தமிழர் விரோத செயல்கள் அனைத்திற்கும் தொடர்ந்து அதிமுக ஆதரவு கொடுத்து வருகிறது எனவும் குறிப்பிட்டு பேசினார் உதயநிதி 

இந்த போராட்டத்தில் உதயநிதி ஏந்தி நின்ற கட்சிக்கொடியை பார்க்கும் போது, ஒட்டுமொத்த  திமுகவையும் தாங்கி பிடிக்கும் தோரணை காட்டுகிறது என்கின்றனர் உடன் பிறப்புகள்.
  
போராட்டத்தின் ஹைலைட்ஸ்..!

 

click me!