திமுகவின் அதிகாரமிக்க பதவிகளில் ஒன்றான இளைஞரணி செயலாளர் பதவியில் உதயநிதி ஸ்டாலின் இன்று மாலை அறிவிக்கப்பட இருக்கிறார்.
திமுகவின் அதிகாரமிக்க பதவிகளில் ஒன்றான இளைஞரணி செயலாளர் பதவியில் உதயநிதி ஸ்டாலின் இன்று மாலை அறிவிக்கப்பட இருக்கிறார்.
திமுக இளைஞரணி செயலாளராக பல ஆண்டுகளாக இருந்துவந்த மு.க.ஸ்டாலின், கட்சியின் செயல் தலைவரான பிறகு அந்தப் பதவியை துறந்தார். இதையடுத்து முன்னாள் அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் நியமிக்கப்பட்டார். நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியை ஆதரித்து தமிழகம் முழுவதும் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்ற பிறகு, உதயநிதிக்கு இளைஞரணி பதவியை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை திமுக முன்னணியினர் வைக்கத் தொடங்கினர்.
திருச்சி, நாமக்கல் மாவட்ட திமுகவினர் இதுதொடர்பாக திமுக தலைமைக்கு தீர்மானங்களை நிறைவேற்றி அனுப்பிவைத்தார்கள். அதற்கேற்க இளைஞரணி செயலாளர் பதவியிலிருந்து வெள்ளக்கோவில் சாமிநாதன் ராஜினாமா செய்துவிட்டதாக தகவல் வெளியானது. ஆனால், ஒரு மாதம் கழித்து இளைஞரணி செயலாளர் பதவிலிருந்து தான் ராஜினாமா செய்யவில்லை என்று அறிவித்தார்.
இந்நிலையில் உதயநிதி ஸ்டாலினை இளைஞரணி செயலாளராக இன்று மாலை திமுக தலைமை அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது.