நாடு முழுவதும் இன்றும், நாளையும் வங்கிகள், தொழிற்சங்கங்கள் ஸ்ட்ரைக் …. பணமும் கிடைக்காது …. பஸ்சும் கிடைக்காது !!

By Selvanayagam PFirst Published Jan 8, 2019, 6:40 AM IST
Highlights

மத்திய அரசின் தொழ்லாளர் விரோதப் போக்கைக் கண்டித்து இன்றும் நாளையும்  நாடு தழுவிய அளவில் வேலை நிறுத்த போராட்டத்தை, தொழிற்சங்கங்கள் தொடங்கியுளளன. முக்கியமாக இந்த வேலை நிறுத்தத்தில் வங்கி ஊழியர்கள் சங்கங்களும் பங்கேற்றுள்ளதால் 40 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான காசோலைகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மக்களின் அத்தியாவசிய சேவையில் பாதிப்பு கூடாது என்பதால், போக்குவரத்து கழக தொழிலாளர்கள் விடுப்பு எடுக்க, தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்; பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்பது உட்பட, 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென, மத்திய - மாநில தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன. ரிசர்வ் வங்கி இன்னும், கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால், இன்றும்இ நாளையும்  நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன.

இந்த போராட்டத்தில், ரிசர்வ் வங்கி, பொதுத்துறை வங்கிகள், ரயில்வே, வருமான வரி, தபால், தொலை தொடர்பு, காப்பீடு உள்ளிட்ட, பல்வேறு முக்கிய சேவை துறை ஊழியர்கள் பங்கேற்கின்றனர். இதன்படி, தமிழகத்தில், 1.5 லட்சம் பேர் உட்பட, நாடு முழுவதும்,13.5 லட்சம், மத்திய அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்க உள்ளனர். ரிசர்வ் வங்கி ஊழியர்கள் ஒரு நாளும், பொதுத்துறை வங்கி ஊழியர்கள் இரண்டு நாள் வேலை நிறுத்தத்திலும் பங்கேற்றுள்ளனர்.


இரண்டு நாட்களில், 40 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, காசோலை பரிவர்த்தனைகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. தெற்கு ரயில்வே தவிர, இதர ரயில்வே மண்டல ஊழியர்களும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்பதால், பல மாநிலங்களில், ரயில் சேவையில் பாதிப்பு ஏற்படலாம். அதே போல, தமிழகத்திலும், போக்குவரத்து துறை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதால், அரசு, தனியார் போக்குவரத்து சேவை பாதிக்க வாய்ப்புள்ளது.

மக்களின் அன்றாட பணிகள் பெரிதும் பாதிக்கப்படலாம். இதனால், இன்றும், நாளையும், போக்குவரத்து கழக ஊழியர்கள் விடுப்பு எடுக்க, போக்குவரத்து துறை தடை விதித்துள்ளது. தடையை மீறி விடுப்பு எடுத்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

click me!