அதிமுக பிரமுகர்கள் கொலை வழக்கு – இருவர் கைது

 
Published : Feb 19, 2017, 05:20 PM ISTUpdated : Sep 19, 2018, 01:36 AM IST
அதிமுக பிரமுகர்கள் கொலை வழக்கு – இருவர் கைது

சுருக்கம்

போரூர் அருகே அதிமுகவை சேர்ந்த தந்தை மற்றும் மகன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் இரண்டு பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை வளசரவாக்கம் கணபதி நகரை சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் அதிமுகவில் திருவள்ளூர் தெற்கு மாவட்ட ஓட்டுனரணி இணைச்செயலாளராக உள்ளார். இவரது மகன் சாந்தனு அதிமுகவில் முன்னாள் வார்டு செயலாளர் பொறுப்பில் இருந்தவர். டாடா ஏசி வாகனம் மூலம் தண்ணீர் கேன் வினியோகம் செய்யும் தொழில் செய்து வந்தார்.

இந்நிலையில் அதேபகுதியை சேர்ந்த தமிழக வாழ்வுரிமை கட்சி பிரமுகரும் ரியல் எஸ்டேட் அதிபருமான செந்தில் குமார் என்பவர் தனது வீட்டிற்கு தண்ணீர் கேன் கொண்டு வருமாறு சாந்தனுவை அழைத்துள்ளார்.

சாந்தனு தண்ணீர் கேன் போட்டுவிட்டு வீட்டிற்கு திரும்பும் போது செந்தில்குமார் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து சாந்தனுவை அரிவாளால் சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. மகனின் அலறல் சத்தம் கேட்டு ஓடிச்சென்ற ராஜ்குமார் அவருடைய மனைவியுடன் சென்றுள்ளார்.

அப்போது மனைவியின் கண் முன்னே கணவர் ராஜ்குமாரையும் அந்த கும்பல் சரமாரியாக வெட்டியுள்ளது. இதில் தந்தை ராஜ்குமாரும், அவரது மகன் சாந்தனுவும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், கொலையுண்ட ராஜ்குமாரின் வீட்டிற்க்கு எதிரில் உள்ள கோவில் ஒன்றின் நிலம் தொடர்பாக ராஜ்குமாருக்கும், தமிழக வாழ்வுரிமை கட்சி பிரமுகர் செந்தில் குமாருக்கும் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

மேலும் சாந்தனு புதிதாக வாங்கியுள்ள டாடா ஏஸ் வாகனத்தை சாலையில் நிறுத்தி இருப்பதால் செந்தில்குமாரின் கார் வந்து செல்ல இடையூறாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து சாந்தனுவிடம் பலமுறை எடுத்துச் சொல்லியும் அவர் கண்டு கொள்ளாததால் அவரை அழைத்துச் சென்று தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து செந்தில்குமார் தீர்த்து கட்டியதாக தெரிகிறது.

இந்நிலையில் இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட செந்தில்குமார் உள்பட இருவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவண்ணாமலையில் கனகராஜ், காட்பாடியில் ஜிஜி ரவி, தற்போது வளசரவாக்கத்தில் ராஜ்குமார், சாந்தனு என்று அடுத்தடுத்து அதிமுக பிரமுகர்கள் படுகொலை செய்யப்படும் சம்பவம் அதிமுக பிரமுகர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. .

PREV
click me!

Recommended Stories

நான் காமராஜரை பற்றி பேசியதை வதந்தி பரப்புகிறார்கள்..! மன்னிப்புக்கேட்ட முக்தார்..!
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு