ஆளுநர் உரையை விமர்சிப்பதைவிட முதல்வரின் செயல்களைப் பாராட்டலாமே.. கனிமொழி சரவெடி..!

By vinoth kumarFirst Published Jun 23, 2021, 11:04 AM IST
Highlights

தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்டதும், தேர்தலின்போது மக்கள் அளித்த வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றிக் கொண்டு வருகிறார். இது அனைவரும் அறிந்து விஷயம். 

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தாப்பாத்தி இலங்கை அகதிகள் முகாமிற்கு இதுவரை எந்தவொரு அரசியல்வாதியும் நேரில் செல்லாத நிலையில், முதல் அரசியல்வாதியாக அங்கு சென்று அகதிகளின் குறைகளை திமுக எம்.பி. கனிமொழி கேட்டறிந்திருக்கிறார். 

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியிலுள்ள தாப்பாத்தி இலங்கை அகதிகள் முகாமிற்கு இதுவரையில் பல ஆண்டுகளாக எந்த ஒரு அரசியல் கட்சித் தலைவர்களும் சென்றதில்லை. இந்நிலையில், திமுக மகளிரணிச் செயலாளரும், தூத்துக்குடி எம்.பி.யுமான கனிமொழி நேரடியாக முகாமிற்கு சென்று நேற்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் தனது சொந்த நிதியில் இருந்து, முகாமில் உள்ள 382 குடும்பங்களுக்கு நிவாரணமாக 15 வகையான மளிகைப் பொருட்களை வழங்கினார். பின்னர், முகாமில் உள்ள ஒவ்வொரு தெருவாகவும், ஒவ்வொருவரின் இல்லமாக சென்று அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார். 

இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கனிமொழி;- தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்டதும், தேர்தலின்போது மக்கள் அளித்த வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றிக் கொண்டு வருகிறார். இது அனைவரும் அறிந்து விஷயம். ஆளுநர் உரையில் எல்லாமே இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதை விட, அதை செய்து கொண்டிருப்பதைப் பாராட்ட வேண்டும்.

இந்து அறநிலையத்துறை தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளதை மட்டுமே, அரசு நேரடியாக தலையிட்டு செய்ய முடியும். மற்ற இடங்களில் பிரச்சினைகள் இருந்தால் நிச்சயமாக அதனையும் சரி செய்ய அரசு முன் வரும் என்றார். 

click me!